அட்டகாசமான சுவையில் தேங்காய்ப்பூ கார முறுக்கு
அட்டகாசமான சுவையில் தேங்காய்ப்பூ கார முறுக்கு தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 5 கப், உளுத்தம் பருப்பு - 1 கப், தேங்காய் பெரியது - 1, ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_7658.html
அட்டகாசமான சுவையில்
தேங்காய்ப்பூ கார முறுக்கு
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 5 கப், உளுத்தம் பருப்பு - 1 கப், தேங்காய் பெரியது - 1, எள் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 15, எண்ணெய் - இரண்டரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் 1 கப் புழுங்கலரிசியை எடுத்து தனியே வைக்கவும். மீதமுள்ள 4 கப் அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். தனியே எடுத்து வைத்த அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். உளுத்தம் பருப்பையும் வறுக்கவும்.
இரண்டையும் தனித்தனியாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த அரிசியை கழுவி கிரைண்டரில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு கிரைண்டரில் அரைத்த மாவுடன், சுத்தம் செய்த எள், பெருங்காயத்தூள், நெய், வறுத்து அரைத்து வைத்துள்ள அரிசி மாவு, உளுத்தம்பருப்பு மாவு எல்லாவற்றையும் நன்றாக கலந்துகொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, சிறிய முறுக்குகளாகப் பிழிந்து, எண்ணெயைக் காயவைத்து, அதில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும். மழைக்கால மாலைக்கு ஏற்ற, ‘கரகர’ கார ஸ்நாக்ஸ் இது.
தேங்காய்ப் பூ கார முறுக்கு: எளிய பலகாரம் இது. ஓலைப் பக்கோடா அச்சிலும் மாவைப் போட்டுப் பிழியலாம்.
--------------------------------------------------------------------------
Post a Comment