மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ.. வெற்றிலை - 2 சாம்பார் வெங்காயம் - 2 சீரகம் - 1 ஸ்பூன் பூண்டுபல் ...

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ.. வெற்றிலை - 2 சாம்பார் வெங்காயம் - 2 சீரகம் - 1 ஸ்பூன் பூண்டுபல் - 2 இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும். வெள்ளைப் பூசணி - 100 கிராம் வெள்ளரி விதை - 10 கிராம் சாம்பார் வெங்காயம் - 2 வெள்ளை மிளகு - 5 கிராம் பூண்டு - 2 பல் பனங்கற்கண்டு - 100 கிராம் இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும். மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும். உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசோகா கசாயம் அசோகமரப்பட்டை - 20 கிராம் மருதம்பட்டை - 10 கிராம் ஆவாரம் பூ - 10 கிராம் திரிகடுகு பொடி - 10 கிராம் திரிபலா பொடி - 10 கிராம் இவையனைத்தையும் தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான அளவிலும் இருக்கும். அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள் முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும். மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும். ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம். மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும். இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு. இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5124998614722045372

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item