சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை !

சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை ! தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி - 250 கிராம் புழுங்கல் அரிசி - 250 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் கடலைப் ...

சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை ! தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி - 250 கிராம் புழுங்கல் அரிசி - 250 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 250 கிராம் பயத்தம் பருப்பு - 50 கிராம் உடைத்த உளுத்தம் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 12 (அல்லது தேவைப்படி) பச்சை மிளகாய் - 5 (அல்லது தேவைப்படி - தவிர்க்கவும் செய்யலாம்) பெருங்காயம் - 1 மே. க. கறிவேப்பிலை - 3 / 4 ஆர்க்குகள் கொத்துமல்லித் தழை - 4 / 5 கைப்பிடிகள் (ஆய்ந்து கழுவியது) உப்பு - 2 மே.க. (அல்லது தேவைப்படி) பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகிய இரண்டையும் தனித் தனியாகத் தண்ணீரில் களைந்த பின் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்த பின் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாய்க் களைந்து ஊற வைக்கவும். இவை யாவும் நசுங்குகிற பதத்துக்கு நன்றாக ஊறியதும் முதலில் மிளகாய்வற்றலுடன் புழுங்கல் அரிசியை மின் அம்மியில் போட்டு நான்கைந்து முறை சுற்றிய பின் பச்சரிசியைஅதன் மீது போட்டு அரைக்கவும். மாவு நன்றாய் மசியக் கூடாது. கர கரவென்று இட்டிலி ரவைப் பதத்துக்கு அரைபட வேண்டும். இவ்வாறு அரைத்த மாவை வழித்து வைத்தபின் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றையும் மின் அம்மியில் ஒன்றாய்ப் போட்டு முன்பு போலவே கரகரப்பாக அரைக்கவும். இவற்றை யெல்லாம் அரைக்கும் போது போதுமான தண்ணீர் விடவும். மாவுகள் கெட்டியாக இருக்க வேண்டும். தோசைக்கு அரைப்பது போல் அதிகமாய்த் தண்ணீர் விட்டு அரைக்கக் கூடாது.அரைத்து முடித்த மாவுகளைப் பெருங்காயம், உப்புப்பொடி, கறிவேப்பிலை,கொத்துமல்லி ஆகியவற்றுடன் நன்கு ஒன்றாய்க் கலக்கவும். இவ்வாறு தயாரித்த மாவை அரை அல்லது ஒரு மணி நேரம் போல் அப்படியே ஊற விடவும். பிறகு கெட்டியான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும். அடிக்கடி அடை தட்டிய வீடு தொடை தட்டுமென்பார்கள். (அதாவது காசு அதிகமாய்ச் செலவாகிச் சாப்பாட்டுக்குத் தாளம் போடுவார்களாம்.) எண்ணெய் குடிக்கும் பதார்த்தம் இது. அதனால் இப்பழ மொழி ஏற்பட்டு இருக்கலாம். அடைக்குத் தொட்டுக்கொள்ளச் சிலர் அவியல் செய்வார்கள். சிலருக்குத் தேன் அல்லது வெல்லம் பிடிக்கும். சிலர் இட்டிலிப் பொடி அல்ல்து தேங்காய்ச் சட்டினியையைத் தொட்டுக்கொள்ளூவார்கள். வேறு சிலர் எதையும் தொட்டுக்கொள்ளாமல் அதன் தனிச்சுவையை ரசித்து உண்பார்கள். எல்லாமே அவரவர் விருப்பம்தான்.

Related

மறந்து போன மருத்துவ உணவுகள் -- சமையல் குறிப்புகள்,

'''உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திர...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 1:23:3 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,123

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item