பழகிய பொருள்.. அழகிய முகம்! கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்து கரிசலாங்கண்ணி.

பழகிய பொருள்.. அழகிய முகம்! கறுப்புதான் கரிசலாங்கண்ணிக்கு புடிச்ச கலரு! கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. ...

பழகிய பொருள்.. அழகிய முகம்! கறுப்புதான் கரிசலாங்கண்ணிக்கு புடிச்ச கலரு! கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது. கார்மேகக் கூந்தலில் உலா வர விரும்புகிறவர்களுக்கு கரிசலாங்கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்! கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு - 3 கப், கீழா நெல்லி இலை சாறு - 1 கப், பொன்னாங்கண்ணி இலை சாறு - 1 கப், எலுமிச்சை சாறு - 1 கப்... இவற்றை 6 கப் நல்லெண் ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள். ‘சடசட’வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல்லிக்காய் பவுடர் - 10 கிராமை இதில் போடுங்கள். பிறகு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி ‘கருகரு’வென்று வளரத் தொடங்கும். பேன் மற்றும் பொடுகினால் அவதிப்படுகிறவர்களுக்கான ஸ்பெஷல் கரிசலாங்கண்ணி தைலம் இது. பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்த சாறு - 2 கப், அருகம்புல் சாறு - 2 கப், தேங்காய் எண்ணெய் - 2 கப்... இவற்றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். நீர்ப் பதம் போய் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள். தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள். இது பொடுகையும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப்பதால், தலை சூப்பர் சுத்தமாகிவிடும். ‘என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே’ என்று கவலைப் படுகிறவர்களை சந்தோஷப்படுத்து கிறது, இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய்... இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டை பொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும். இளநரை வராமல் தடுக்கிற அற்புத சக்தி கரிசலாங் கண்ணியில் இருக்கிறது. கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள். இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், தயிர் - 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதைத் தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் 2 முறை இந்த ‘பேக்’ போட்டு குளித்து வந்தால், இளநரை பக்கத்திலேயே வராது. சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலிவிழந்திருக்கும். வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணியின் தனித்துவம்! செம்பருத்தி பூ - 1 கப், கரிசலாங்கண்ணி இலை - 1 கப்... இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள். இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும்வரை... அதாவது சுமார் 10 நாட்கள்... வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்பருத்தி, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும். கரிசலாங்கண்ணி, வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 929374497917304502

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item