வாசகிகள் கைமணம்! ரஸ்க் லட்டு
ரஸ்க் லட்டு தேவையானவை: ரஸ்க் ஸ்லைஸ் - 6, சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 1...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_3845.html
ரஸ்க் லட்டு
தேவையானவை: ரஸ்க் ஸ்லைஸ் - 6, சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ரஸ்க்கை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும். முந்திரியை துருவிச் சேர்க்கவும் (அல்லது சிறு துண்டுகளாக ஒடித்துப் போடலாம்). ஏலக்காயைப் பொடிசெய்து போடவும். எல்லாவற்றையும் கலந்து, நெய்யைச் சுடவைத்து ஊற்றி, உருண்டைகளாகப் பிடிக்கவும். பண்டிகைகளுக்கு எளிமையாகச் செய்யக்கூடிய இனிப்பு இது.
ரஸ்க் லட்டு: ரஸ்க் தூளுடன் அரை கப் மில்க் பவுடர் சேர்த்துக் கலந்து உருட்டினால், லட்டு பிரமாதமாக இருக்கும். அப்படி மில்க் பவுடர் சேர்ப்பதாக இருந்தால் சர்க்கரை அரை கப் போட்டால் போதும்.
--------------------------------------------------------------------------------------
Post a Comment