சமையல் குறிப்புகள்! ஸ்டஃப்டு கத்தரிக்காய் மசாலா கறி
ஸ்டஃப்டு கத்தரிக்காய் மசாலா கறி தேவையானவை: கத்தரிக்காய் -6 வெங்காயம்-1 கப் ..வெங்காயத்தை அரைத்து கொள்ளவும் மிளகாய் தூள் -1 ஸ்பூன் , மல்லி தூ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_3642.html
ஸ்டஃப்டு கத்தரிக்காய் மசாலா கறி
தேவையானவை:
கத்தரிக்காய் -6
வெங்காயம்-1 கப் ..வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்
மிளகாய் தூள் -1 ஸ்பூன் ,
மல்லி தூள் -2 ஸ்பூன்,
கரம் மசாலா -1/2 ஸ்பூன்,
சீராக தூள் -1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது
தேங்காய் -2 ஸ்பூன் (அரைத்து )
புளி -1 /2 கப்
உப்பு
அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.கத்திரிக்காயை நான்காக நடுவில் மட்டும் வெட்டி கொள்ளவும்.ஒவ்வொரு கத்திரிக்காயிலும் ஸ்டஃபிங்கை அடக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணைவிட்டு ஜீரகம் ,கடுகு தாளித்து ஸ்டஃப்டு கத்திரிக்காயை போட்டு 6 to 7 நிமிடம் வதக்கவும் .
பிறகு மிதம் உள்ள மசாலா கலவையும் சேர்த்து சிறுது தண்ணீர் ,புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
தண்ணீர் வற்றி சுருளாகும் வரை நன்கு கிளற வேண்டும்.கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Post a Comment