வாசகிகள் கைமணம்! கரேலா க்ரிஸ்பீஸ்
கரேலா க்ரிஸ்பீஸ் தேவையானவை: பாகற்காய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_22.html
கரேலா க்ரிஸ்பீஸ்
தேவையானவை: பாகற்காய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், அரிசிமாவு - கால் கப், கடலைமாவு - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: பாகற்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அத்தண்ணீரில் உப்பு சேர்த்து பாகற்காய்களை புளித்தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் ஊறிய பின்னர் அந்த பாகற்காய் வில்லைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசிமாவு, கடலைமாவு, பெருங்காயத்தூள் இவைகளை சேர்த்து நன்றாக பிசறவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து சிவக்க பொரித்தெடுக்கவும். கசப்பில்லாத பாகற்காய் க்ரிஸ்பீஸ் ரெடி.
கரேலா க்ரிஸ்பீஸ்: இந்த முறையில் செய்தால் பாகற் காயின் கசப்பே தெரியாது. கடலைமாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவு சேர்த்தும் செய்யலாம்.
--------------------------------------------------------------
Post a Comment