ரசிக்க ருசிக்க..! முட்டைக் குருமா
முட்டைக் குருமா தேவையான பொருட்கள் முட்டை - 4 வெங்காயம், தக்காளி - 150 கிராம் பச்சைமிளகாய் - 2 இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 4 பல் தேங்காய் ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1844.html
முட்டைக் குருமா
தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம், தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1/4 மூடி
முந்திரிப்பருப்பு - 4
கசகசா - 2 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
சோம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 குழிக்கரண்டி
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
* இத்துடன் வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் இவைகளைச் சேர்த்துக் கிளறவும்.
* இப்போது அரைத்து வைத்த தேங்காய், கசகசா முந்திரிப் பருப்பு கலவையைச் சேர்க்கவும். (அரைத்த கலவை மிகவும் திக்காகவும் இருக்கக் கூடாது, நீராகவும் இருக்கக்கூடாது)
* முட்டையை துண்டுகளாக்கி சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மசாலா வெந்ததும் இறக்கி விடவும்.
Post a Comment