சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உதவும் இஞ்சி உருண்டையைச் செய்வது எப்படி?
சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உதவும் இஞ்சி உருண்டையைச் செய்வது எப்படி? இஞ்சிச் சாறு - 50 மில்லி, வெல்லம் - அரை கிலோ (பாகு வைக்கவும்), ம...

இஞ்சிச் சாறு - 50 மில்லி, வெல்லம் - அரை கிலோ (பாகு வைக்கவும்), மிளகு, திப்பிலி, சீரகம், மல்லி (தனியா), கசகசா, ஓமம் - தலா 10 கிராம், தேவையான அளவு ஏலக்காய், நெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சிச் சாறு, வெல்லம், நெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடி செய்யவும். வெல்லப்பாகில் இஞ்சிச் சாறு சேர்த்துக் கெட்டிப்பதம் வரும் வரை காய்ச்சவும். பின்னர் வறுத்துப் பொடி செய்ததை இதில் கலந்து நிறைய நெய்விட்டுக் கிளறி இறக்கவும். சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
Post a Comment