எண்ணெய் குடிக்காத வடை செய்வது எப்படி?
எண்ணெய் குடிக்காத வடை செய்வது எப்படி? ஒரு டம்ளர் உளுந்து, ஒரு பிடி துவரம்பருப்பு எடுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து, தண்ணீர்...

ஒரு டம்ளர் உளுந்து, ஒரு பிடி துவரம்பருப்பு எடுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து, தண்ணீர் விடாமல் கிரைண்டரில் அரைக்கவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). மாவு கெட்டியாகவும், மிருதுவாகவும் ஆனதும் எடுக்கவும் (பச்சை மிளகாயை மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைக்கவும்). மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
வடைக்கு மாவு அரைத்ததுமே வடையாகத் தட்டி எண்ணெயில் போட வேண்டும். மாவை அப்படியே வெகுநேரம் வைக்க வேண்டாம். மாவைக் கெட்டியாக அரைத்து, மாவு அரைத்த பிறகு உப்பு போட்டுக் கலக்க வேண்டும்.
Post a Comment