வாய்க்கு ருசியான, உடலுக்கு நன்மை அளிக்கும் ‘மிளகாணம்’ என்னும் கறிவேப்பிலைக் குழம்பு செய்யும் முறையை வழங்குங்களேன்...
வாய்க்கு ருசியான, உடலுக்கு நன்மை அளிக்கும் ‘மிளகாணம்’ என்னும் கறிவேப்பிலைக் குழம்பு செய்யும் முறையை வழங்குங்களேன்... கறிவேப்பிலையுடன் அத...

கறிவேப்பிலையுடன் அதற்குத் தகுந்த மிளகு, சீரகம் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி, மிக்ஸியில் சேர்த்து, நீர்விட்டு, வெண்ணெய் போல் அரைக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்புச் சேர்த்து வைக்கவும். முற்றலாக இல்லாத முருங்கைக்காயை ஒரு விரல் அளவு நீளத்தில் நறுக்கி லேசாக வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள், கடுகு சேர்த்து, இரண்டு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டுத் தாளிக்கவும். புளிக்கரைசலை ஊற்றி, புளிக்காய்ச்சல் பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த கறிவேப்பிலை விழுதைக் கரைத்து ஊற்றி, முருங்கைக்காயைப் போட்டு மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இந்த ‘மிளகாணம்’ என்கிற கறிவேப்பிலைக் குழம்பு நாக்குக்கு ருசியைக் கூட்டும். இரும்புச்சத்து கொண்டது. இதைச் சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் சுவையும், மணமும் அசத்தும். இதை நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும். ஜீரண சக்தி பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். பார்வைத்திறன் அதிகரிக்கும். பித்தம் குறையும்.
Post a Comment