சாட்டூ... பானம் இது உடல் பலத்தை அதிகரிக்கும்!
சாட்டூ... பானம் இது உடல் பலத்தை அதிகரிக்கும்! தேவையானவை : பார்லி - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐ...

தேவையானவை: பார்லி - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ்வாட்டர் - ஒரு கப்.
செய்முறை: பார்லியை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் நன்கு சிவக்க வறுக்கவும் (தீய்ந்துவிடக் கூடாது). ஆறிய பின் நன்கு பொடி செய்து, ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைக்கவும். மூன்று டீஸ்பூன் பார்லி பவுடர், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, ஐஸ்வாட்டர் கலந்து பரிமாறவும்.
பீகார் மாநிலத்தின் கோடைக்கால பானம் இது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதில் சிறிது உப்பு சேர்த்துப் பருகலாம். பார்லி உடல் சூட்டைக் குறைக்கும் தன்மையுள்ளது. சிறுநீர் எரிச்சலை நீக்கும். உடல் பலத்தை அதிகரிக்கும்.
Post a Comment