ஈஸியாகச் செய்யக்கூடிய மிக்ஸர் ஏதாவது உண்டா?
ஈஸியாகச் செய்யக்கூடிய மிக்ஸர் ஏதாவது உண்டா? ஈஸியாக கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் செய்யும் செய்முறை இதோ... கார்ன்ஃப்ளேக்ஸ் - 2 கப், பொட்டுக்க...

ஈஸியாக கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் செய்யும் செய்முறை இதோ...
கார்ன்ஃப்ளேக்ஸ் - 2 கப், பொட்டுக்கடலை, வேர்க்கடலை - தலா கால் கப், முந்திரி - 15, உலர்திராட்சை - 20, பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிட்டு, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் சாட் மசாலா சேர்த்துக் கலந்துவிடவும். கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ரெடி.
விருப்பப்பட்டால், கறிவேப்பிலையைப் பொரித்துப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்துவிடலாம்.
Post a Comment