‘பேலியோ டயட்’ தொடங்கப் போறீங்களா? முதல்ல இந்தப் பரிசோதனைகளைச் செஞ்சுடுங்க!
``இ ளமை மாறாமல், ஃபிட்னெஸுடன் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பம். அதற்காக ‘பேலியோ டயட்’ உணவுப் பழக்கத்துக்குப் பலரும் ம...

``இளமை மாறாமல், ஃபிட்னெஸுடன் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பம். அதற்காக ‘பேலியோ டயட்’ உணவுப் பழக்கத்துக்குப் பலரும் மாறி வருகிறார்கள். ஆறு மாதத்துக்குள் ஒல்லியான உடலுக்கு மாற நினைத்து திடுதிப்பென பேலியோ டயட்டைத் தொடங்கும் முன், சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டியது அவசியம்’’ என்னும் நரம்பியல் நிபுணர் மரியானோ ஆன்டோ ப்ருனோ மஸ்கரணாஸ்...
``பேலியோ டயட்டுக்கு மாறுவதற்கு முன்பாக, கொழுப்புப் பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, தைராய்டு பரிசோனை, இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை அறியும் பரிசோதனை, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை என ஆறு வகையான பரிசோதனைகளைச் செய்வது நல்லது.
பேலியோ டயட்டை மேற்கொள்ளும்போது நாம் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இத்தனை நாள்களாக நாம் ஏற்றிருந்த உணவுப் பழக்கத்திலிருந்து மாறுபட்ட ஓர் உணவுமுறையைத்் தேர்ந்தெடுப்பதால், சில பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
ஆரம்பத்தில் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரையும் வழக்கத்தைவிட அதிகமாகப் பருக வேண்டும். சில நாள்களுக்கு உடற்பயிற்சிகளைச் செய்யாமலிருப்பது நல்லது. ஒரு வாரத்துக்குள் இந்தப் பின்விளைவுகள் எல்லாம் மறைந்து இயல்பான நிலைக்கு நம்முடைய உடம்பு மாறிவிடும்.
பேலியோ டயட்டில் இருப்பவர்கள் செய்யும் தவறுகள்...
உடற்பயிற்சிகள் தேவை இல்லை
சைக்கிளிங், ஓடுதல், ஜாகிங், வெளியில் விளையாடும் விளை யாட்டுகள், பளுதூக்குதல் போன்ற கடும் பயிற்சிகளைச் செய்ய வேண்டிய அவசிய மில்லை. நாம் ஏதாவது உடற் பயிற்சி செய்ய வேண்டுமே என்று நினைப்போம். ஆனால், சோம்பேறித்தனமும் நேரமின்மையும் நம்மை ரொம்பவே குற்ற உணர்வோடு இருக்கச் செய்யும். ஆனால், பேலியோ டயட்டில் இருப்பவர் கள் இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தினசரி நடைப்பயிற்சி மட்டும் செய் தால் போதும்’’ என்கிறார்.
பேலியோ மாதிரி டயட் சார்ட்:
மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். சர்க்கரை, தேன், பேக்கரி பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அசைவ டயட் சார்ட்:
ஸ்நாக்ஸ்: தினமும் ஒரு கப் கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் கொழுப்பு உள்ள சீஸ்.
சைவ டயட் சார்ட்:
ஸ்நாக்ஸ்: ஒரு கப் முழுக் கொழுப்பு உள்ள பால் அல்லது தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துக்கொள்ளவும்.
30 நாள் பேலியோ சவால் (30 Days Paleo Challenge)
இந்த முப்பது நாள்களும் கீழே தரப்பட்டுள்ள பொருள்களை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வெண் ணெய், நெய், தேங்காய், தயிர், சீஸ், கீரை, காலிஃபிளவர், புரோக்கோலி, பாதாம், பிஸ்தா, அவகேடோ, கொய்யா, பூண்டு, நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, மீன், கடல் உணவுகள் மற்றும் கிரீன் டீ, மோர் ஆகியவற்றை மட்டுமே உண்ண வேண்டும். இதைத் தவிர்த்து வேறு எதையும் சாப்பிடவே கூடாது. இந்த டயட்டில், குளுக்கோஸுக்கு மாற்றாக கொழுப்பு அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
Post a Comment