மூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கும் முட்டைக்கோஸ் சிகிச்சை!

நம்மில் பலருக்கு காய்கறிகளில் சில பிடிக்காது. பரிமாறும்போதே, அசூயையாகப் பார்த்து ஓரம்கட்டிவிடுவார்கள். சிலர் கையால்கூடத் தொடமாட்டார்கள். ...

நம்மில் பலருக்கு காய்கறிகளில் சில பிடிக்காது. பரிமாறும்போதே, அசூயையாகப் பார்த்து ஓரம்கட்டிவிடுவார்கள். சிலர் கையால்கூடத் தொடமாட்டார்கள். பீட்ரூட், சேனைக்கிழங்கு... என நீள்கிற அந்தப் பட்டியலில் முட்டைக்கோஸுக்கும் ஓர் இடம் உண்டு. சிலருக்கு இது அரைவேக்காடாக இருந்தால் பிடிக்காது; சிலருக்கு முழுவதுமாக வெந்திருந்தாலுமே பிடிக்காது. என்னதான் கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல், வாசனைக்குப் பெருங்காயம் எல்லாம் சேர்த்து, பொரியலாகப் பரிமாறினாலும், `வேண்டாம்’ என்பதுபோல பரிமாறுவதற்கு முன்னதாகவே கைகள் நீண்டு தடைபோடும். `முட்டைக்கோஸ் ஒரு வொண்டர்ஃபுல் வெஜிடபுள்’. இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது; மூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கக்கூடியது என்கிற நம்பிக்கை பரவலாக எழுந்துள்ளது.

முட்டைக்கோஸ் இலை வகையைச் (Leafy vegetable) சார்ந்த ஒரு தாவர வகை. வைட்டமின் சி, கே, பி 6, பி1, பி 2, நார்ச்சத்து, ஃபோலேட், காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, கோலின், மக்னீசியம், நியாசின், புரோட்டீன், பாஸ்பரஸ், பேன்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) என எக்கச்சக்க சத்துகள் நிறைந்துள்ளன. அதனால்தான் மாற்று மருத்துவத்தில் முட்டைக்கோஸுக்கு எப்போதுமே தனியான ஓர் இடம் உண்டு. குறிப்பாக, இதன் இலையை சுளுக்கு, கட்டி, வீக்கம், புண்கள் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும், `ஆர்த்ரிட்டிஸ்’ எனப்படும் மூட்டுவலி தொடர்பான பிரச்னைகளுக்கும் முட்டைக்கோஸின் இலையில் உள்ள வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருள்கள் (Anti-Inflammatory properties) நல்ல தீர்வைத் தரக்கூடியவை என நம்புகிறார்கள் மாற்று மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளவர்கள்.

பல வருடங்களாகவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வந்திருக்கிறது. அதிகச் செலவில்லாத சிகிச்சை. எனவே, இயற்கையான முறையில் மூட்டுவலிக்கு இது தீர்வு தரும் என்கிற நம்பிக்கை காரணமாக, பல மூட்டுவாத (Arthritis) நோயாளிகளின் கவனம் இப்போது முட்டைக்கோஸின் பக்கமும் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. `கௌட்’ (Gout) எனப்படும் கீல்வாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் முட்டைக்கோஸால் சிகிச்சை செய்துகொண்டபோது அது வலியைத் தணித்துள்ளது.

முட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது?

* சில முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி ஒரு பிளாஸ்டிக் கவரில் போடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துவிடவும்.

* ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகள் ஜில்லென்று ஆகவேண்டும்; அதே நேரம் அதன் வளைதன்மை மாறாமலும் இருக்க வேண்டும்.

* வலி வரும்போது அல்லது வலி வருவதாக உணரும்போது, ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸின் இலைகளை எடுக்கவும். வலியுள்ள இடத்தில் அந்த இலைகளை வைத்து, ஒரு துணியால் கட்டவும். வெதுவெதுப்பாக இருக்கும் தோல்பகுதி சில்லென்று ஆகும்வரை அப்படியே வைத்திருக்கவும். இந்தச் சிகிச்சையில், முட்டைக்கோஸில் இருக்கும் கீல்வாதத்துக்கு எதிராகச் செயல்படும் ரசாயனங்கள் தோல் வழியாக ஊடுருவி, மூட்டுகளில் சேர்ந்திருக்கும் வலிக்கான காரணிகளை (Uric crystal deposits) கரைந்துபோகச் செய்யும். அல்லது குறைந்தபட்சம் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யும்.

* மூட்டுகளில் வீக்கம் உள்ளவர்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகளை எடுக்கவும். வீங்கிய இடத்தில் இலைகளை வைத்து, துணியால் கட்டுப்போடவும். அப்படியே ஒரு சேரில் அமர்ந்து, வலியுள்ள பாதத்தை மட்டும் 30 நிமிடங்களுக்கு உயர்த்திப் பிடிக்கவும். முட்டைக்கோஸுக்கு நீரை ஈர்க்கும் சக்தி உண்டு. இது, மூட்டில் உள்ள அதிகப்படியான திரவத்தை எடுத்து, வீக்கத்தைக் குறைத்துவிடும்.
இந்தச் சிகிச்சை பற்றி இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரனிடம் கேட்டோம்... ``முட்டைக்கோஸில் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பது உண்மைதான். ஆனால், காலில் வீக்கம், மூட்டுவலி உள்ளவர்கள் இதை முதலுதவி சிகிச்சையாகச் செய்துகொள்ளலாம். மற்றபடி இந்த சிகிச்சையை மட்டும் முழுமையாக நம்பக் கூடாது’’ என்கிறார் வெங்கடேஷவரன்.

கவனம்: முட்டைக்கோஸ் அலர்ஜி என்பவர்கள் இதைச் செய்துகொள்ள வேண்டாம். இந்தச் சிகிச்சையின்போது முட்டைக்கோஸின் இலை வைத்திருக்கும் இடத்தில் எரிச்சலோ, அரிப்போ, வீக்கமோ ஏற்பட்டால், உடனே அதை அகற்றிவிட வேண்டும். அந்தப் பிரச்னை தொடர்ந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4122577822955145747

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item