அள்ள அள்ள ஆரோக்கியம்... அசத்தல் கேழ்வரகு! நலம் நல்லது !!
அ ரிசி தோசைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம்? கேழ்வரகுதான் சிறந்த தேர்வு. கேழ்வரகு, அரிசியைப்போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் தா...

கேழ்வரகின் சிறப்புகள்... பலன்கள்... பயன்படுத்தும் முறைகள்!
* அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங்களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச்சத்தும் அதிகம். பாலைவிட மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. பாலும் அரிசியும் உடம்பை வளர்க்கும்; கேழ்வரகோ, உடல் இளைக்க உதவும். எல்லோருக்கும் ஏற்ற தானியம்... வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் கால மகளிருக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் மிக மிக அவசியமான உணவு கேழ்வரகு.
* மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான, ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக நமக்குக் கிடைக்கும் கேழ்வரகில் கஞ்சிவைத்துக் குடிக்கலாம். இதற்கு இணை, ஏதும் இல்லை.
* கேழ்வரகில் `மித்தியானைன்’ (Methionine) எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது, இதன் கூடுதல் சிறப்பு. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பராமரிக்கவும் இந்தப் புரதச்சத்து மிக அவசியம். `மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும்தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இது மிகவும் உதவும்.
* சமீபத்திய ஆய்வுகளில், மூட்டுவலி முதல் ஆண்மைக்குறைவு வரை பல நோய்களுக்கு கேழ்வரகு உணவு, நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு!
* கேழ்வரகு உணவுடன் பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகு தித்திப்பால்
செய்முறை:
சிறிது கேழ்வரகை ஊறவைத்து, அதில் பால் எடுத்து, அத்துடன் பனைவெல்லம் சேர்க்க வேண்டும். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சமாக நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ்வரகுத் தித்திப்பால்.
* குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து, உணவில் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.
வீட்டுச் சமையலறைக்கு கேழ்வரகை அழைத்து வாருங்கள். ஆரோக்கியம் என்றும் நம் வசம்!
Post a Comment