சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவின் புகழ்மிக்க பொன்மொழிகள்!
ஃபிடலின் புகழ்மிக்க பொன்மொழிகள்: * இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! * கஷ்டங்கள் மட்...

*இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்!
*நீங்கள் என்னைக் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்!
*அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
இப்போதும் கியூபாவில் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனைக் குழந்தைகளும் ஒருமித்தக் குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் 'சே'-வைப்போல ஃபிடல் காஸ்ட்ரோ-வைப் போல இருப்போம்!” என்பதே.
ஆம்.... அந்த மாபெரும் தலைவரின் ஆத்மா கண்டிப்பாகக் காற்றில் கலந்து கியூபா மக்களை வழி நடத்திக் கொண்டே இருக்கும்!
Post a Comment