சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது–19 #DailyHealthDose
8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்புப் பொருள், தேன்! சர்க்கரையை ஒதுக்க விரும்புகிறவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கவேண்டியது தே...

சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?
* ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன், அதாவது 10 கிராம் அளவு தேனை எடுத்துக்கொள்ளலாம்.
* தண்ணீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அதிக வெப்பநிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைத்துவிடும்.
* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? வேண்டாம். பொதுவாகவே, சர்க்கரைநோய்க்காரர்கள், தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ.... சேர்த்துக்கொள்ளக் கூடாது. கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
* `இனிப்பு என்றாலே தேனும் பனைவெல்லமும்தான்’ என சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.
* இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்துவிட வேண்டும். இதை `இஞ்சித் தேனூறல்’ என்பார்கள். இந்த இஞ்சித் தேனூறலை தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மைக்ரேன் தலைவலி மட்டுப்படும்.
* சாதாரணத் தலைவலியா? சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளவும். இதை தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போய்விடும்.
உடலுக்கு ஒவ்வாத வெண் சர்க்கரையைத் தவிர்ப்போம். அதற்குப் பதிலாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்!
Post a Comment