படிப்பதை மறக்காமல் இருக்க டிப்ஸ்! - தெரிந்துகொள்வோம்!
பெ ற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குறித்து இருக்கும் முக்கியக் கவலை, தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் பற்றியதுதான். எந்தக் காரணத்தைக் கொ...

குழந்தைகளின் மறதிக்கு என்ன மருத்துவம் என்று யோசிக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. அவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில், குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதற்கான வழிகள் சொல்கிறார்... விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீ.திலீப்.
1. நிமானிக்ஸ் (Mnemonics) டெக்னிக்
நினைவில் வைத்திருக்க வேண்டிய பகுதியின் முக்கியமான சொற்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு வாக்கியம் அமைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக... சூரியனைச் சுற்றிச் சுழலும் கோள்களை சரியான வரிசையில் நினைவில் வைத்துக்கொள்ள, அவற்றின் முதல் எழுத்துக்களைக்கொண்டு உருவாக்கப்படும் வாக்கியம் My Very Excellent Mother Just Served Us Noodles (MVEMJSUN), வானவில் நிறங்களை நினைவில் வைத்துக்கொள்ள VIBGYOR... இப்படி.
2. லிங்க் மெத்தட்
படிக்கும் பாடத்தோடு நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு விஷயத்தைத் தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, சூரியன் பற்றிய பாடத்துக்கு ‘பல்பு’ என்பதை வைத்துக்கொள்ளலாம். சூரிய ஒளியை பல்பு வெளிச்சம், இரவாவது மின் தடை என்று சூரியன் பற்றிய அனைத்து விஷயங்களையும் இப்படி தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.
3. உதவும் விரல்கள்
படித்ததை கோவையாக எழுத முடியாமல் பல குழந்தைகள் சிரமப்படுவார்கள். இதற்குக் காரணம், படித்ததை சரியான வரிசையில் நினைவு வைத்துக்கொள்ள முடியாததுதான். அதற்கு, விரல்கள் உதவும். பாடத்தின் உள்ளடக்கக் கருத்துகளை கற்கும்போது முதல் பகுதியை கட்டை விரலிலிருந்து தொடங்கி, சுண்டு விரலில் முடிவுப் பகுதியைக் கொண்டு செல்ல வேண்டும். ஏதேனும் ஒரு விரல் விஷயத்தை மறந்தாலும் பதில் தொடர்பில்லாமல் போய்விடும் என்பதை புரிந்துகொள்வார்கள். இது பழகும்போது சிரமமாக இருந்தாலும் செல்ல செல்லப் பழகிவிடும்.
4. கதைகள் உருவாக்கலாம்
மனப்பாடப் பகுதியில் ஒவ்வொரு சொல்லையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் அவற்றை ஒரு கதை போல உருவாக்கிக்கொள்ளலாம். நிமோனிக்ஸ் டெக்னிக்கில் சொற்களின் முதல் எழுத்தைக் கோத்து புதிய சொல்லை உருவாக்கியதுபோல, சொற்களை வைத்து ஒரு கதை உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணமாக... தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள ‘கழுதையிடம் உதை வாங்கியவன்’ என ஆரம்பித்து ஒரு கதையாக உருவாக்கிக்கொண்டால் மறந்து போகாது.
5. மைண்ட் மேப்
இது மனதுக்குள் ஓவியம் வரைந்துகொள்ளும் உத்தி. தாவரங்கள் பற்றிய பாடம் என்று வைத்துக்கொண்டால்... மனதுக்குள் ஒரு மரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் அடி தாவரம், அது வளர்ந்து மேலே இரண்டாகப் பிரியும் கிளைகள், பூக்கும் தாவரம், பூக்காத தாவரம், பூக்கும் தாவரத்தில் இருக்கும் சிறு கிளை, அதன் அறிவியல் பெயர் என உருவகித்துக்கொள்ள வேண்டும். மரம் என்பது மட்டுமல்ல, கார், விமானம், பொம்மை என அவரவருக்கு என்ன பிடிக்குமோ அதை மைண்ட் மேப்பில் உருவாக்கிக்கொள்ளலாம்.
6. பயண முறை
குழந்தைகளுக்குப் பயணம் என்றாலே உற்சாகம்தான். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழி
7. ரைமிங் மெத்தட்
சில கருவிகளைக் கண்டு பிடித்தவர்களின் பெயர், பாடல் எழுதியவர் பெயர் போன்றவை மனதில் எளிதாகத் தங்காது. அதற்காக ரைமிங் மெத்தட் பயன்படுத்தலாம். அதாவது, ஷேக்ஸ்பியர் பெயருக்கு வகுப்பில் இருக்கும் ஷேக் அப்துல்லாவின் பெயரையும், அரிஸ்டாட்டிலுக்கு அரி பிரசாத் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளலாம். ரைமிங் மாணவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பெயரும் ஞாபகத்துக்கு வந்துவிடும்.
8. எட்டுப் போடு
தரையில் சாக்பீஸால் பெரிய அளவில் எண் எட்டை வரைந்து அந்தக் கோட்டிலிருந்து விலகாமல் பிள்ளையை நடக்கச் செய்ய வேண்டும். நடக்கும்போது கைகளாலும் எட்டு வரைந்துகொண்டே செல்லப் பழக்கலாம். இதனால் மூளையின் வலது மற்றும் இடது பக்கங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்.
9. ரெக்கார்டு
மனதுக்குள் படிக்கும்போது, சில சொற்களின் உச்சரிப்பைக் கவனத்தில்கொள்ள மாட்டார்கள்.
குழந்தைகளிடம் மனமாற்றம் கொண்டுவர வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கு அடுத்து பெற்றோர்களிடமே உள்ளது!
Post a Comment