ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் என்ன செய்யலாம்?
ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் என்ன செய்யலாம்? இ ன்றைய தேதியில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர் என்...

டேர்ம் இன்ஷூரன்ஸ்!
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பழக்கம் இன்று பரவலாக அதிகரித்தாலும், காலத்துக்கு தகுந்தாற்போல் கவரேஜ் தொகையை அதிகரித்துக்கொள்வதில் வெகு சிலர் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.
மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால் ஒரு மாதம் சம்பாதிக்கும் தொகையைப் போல் குறைந்தது 150 மடங்கு அல்லது பிசினஸ்மேன் என்றால் வருடத்துக்குக் கிடைக்கும் வருமானத்தைப்போல, 15 மடங்கு டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும்.
ஏன் 150 மடங்கு..?
ஏதோ ஒரு அசம்பாவிதத்தில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் உயிருடன் இருந்து மாதம் எவ்வளவு சம்பாதித்து தந்தாரோ, அந்த தொகையை அவரது இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் தொகையை முதலீடு செய்வதிலிருந்து கிடைக்கும் வட்டியே தந்துவிடும். உதாரணமாக, ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். அவர் 10,000*150=15 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார். அவர் ஏதோவொரு காரணத்தால் இறந்துவிட்டார் என்றால், அவர் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து கிடைத்துவிடும். இந்த தொகையை அப்படியே 8% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய் கிடைக்கும் என்றால் மாதத்துக்கு (1,20,000/12) 10,000 ரூபாய் கிடைக்கும். இதற்காகத்தான் மாத சம்பளத்தைப் போல குறைந்தது 150 மடங்கு டேர்ம் பிளான் எடுக்க சொல்கிறோம்.
இது மட்டுமல்ல, உங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து எதிர்காலத்தில் ஏற்படும் பணவீக்கத்தை சமாளிக்க முடியுமா என்பதையும் கணக்கிட்டு, கவரேஜ் தொகையை நிர்ணயிங்கள். உதாரணமாக, உங்கள் வயது 40; மாத வருமானம் 30,000 ரூபாய் என்றால் அடுத்த 20 வருடத்தில் 6 சதவிகித பணவீக்கத்தைக் கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு 96,000 ரூபாய் தேவை. ஆண்டுக்கு கணக்கிட்டால் (96,000*12) 11,52,000 ரூபாய் தேவை. ஆண்டுக்கு 11,52,000 ரூபாய் தேவை என்றால் 11.52லட்சம்*15 = 1.73 கோடி ரூபாய்க்கு டேர்ம் பிளான் தேவை.
நீங்கள் முதலில் எடுத்த பாலிசியின் கவரேஜ் தொகையைவிட தற்போது கூடுதல் கவரேஜ் தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்றால் அதே நிறுவனத்தில் வேறு ஒரு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது முந்தைய பாலிசியைவிட சிறந்த சேவை மற்றும் பிரீமியம் குறைவாக இருக்கிறது என்றால் தாராளமாக வேறு நிறுவனத்தில் டேர்ம் பாலிசியை எடுக்கலாம்.
பொதுவாக, 60 வயது வரை டேர்ம் பாலிசி இருந்தால் போதுமானது. 60 வயதுக்கு மேலும் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள், உங்களின் வருமானத்தை எதிர்பார்த்துதான் குடும்பம் இருக்கிறது என்றால் டேர்ம் பாலிசியை தொடரலாம். பொதுவாக, 40 வயதுக்கு மேல் புதிய டேர்ம் பாலிசி எடுப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கூடுதல் பிரீமியம் நிர்ணயிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கூடுமானவரை 40 வயதுக்கு முன்பே, 60 வயதில் இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு ஒரு பாலிசியை எடுத்துவிடுவது நல்லது.
அதேபோல் உங்களை நம்பி இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதைப் பொறுத்து பாலிசியை மாற்றி அமைக்க வேண்டும். உதாரணமாக, திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தபின் உங்களை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கை தேவைக்கும் கணக்கிட்டு டேர்ம் பாலிசி எடுப்பது நல்லது. சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இன்க்ரீசிங் டேர்ம் இன்ஷூரன்ஸ் (Increasing Term Insurance) என்கிற புது வகையான பாலிசிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இந்த வகையான பாலிசிகளில் ஆண்டு ஒன்றுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் கவரேஜ் தொகை அதிகரிக்கும். ஆனால், பிரீமியம் மாறுபடாது.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் சராசரி ஆயுள் 75 ஆண்டுகள் வரை அதிகரித்துவிட்டது. ஆனால், சம்பாதிக்கிற காலம் குறைந்துவிட்டது. இன்றைய தலைமுறையினர் 45 - 50 வயதிலேயே பணி ஓய்வு பெற்றுவிட்டு, தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யத் திட்டமிட்டு முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை செய்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும் அதிலும் ஒரு குறை வைத்துவிடுகிறார்கள். அதுதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருப்பது.
பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் 1 - 3 லட்சம் ரூபாய்க்கு எடுக்கிறார்கள். இந்த தொகை போதுமானதாக இருக்காது. மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் சகஜமாக வரும் இதய நோய், புற்றுநோய், சர்க்கரை பாதிப்பு போன்ற வற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சில லட்ச ரூபாய் நிச்சயம் போதாது. அது மட்டுமின்றி மருத்துவ செலவுகளின் பணவீக்கம் ஆண்டுக்கு சுமாராக 15 - 20% அதிகரித்து வருகிறது.
எனவே, அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், உங் களுக்கு என்று தனியாக ஹெல்த் பாலிசி இருக்கிறதா என்று பாருங்கள். இருக்கிறது என்றால் உங்கள் வயதுக்கு தகுந்த அளவுக்கு கவரேஜ் தொகை இருக்கிறதா என்பதை உறுதிபடுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் 30 வயதுக்கு கீழ், திருமணமாகாமல் இருக்கிறீர்கள் என்றால் ரூ.3 லட்சம் கவரேஜ் தொகையே போதுமானது. இதுவே நீங்கள் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றால் உங்கள் குடும்பத்துக்கு (மனைவி, கணவன், 2 குழந்தைகள்) ஹெல்த் பாலிசி கவரின் கவரேஜ் தொகை குறைந்தபட்சம் 12 லட்சம் ரூபாய்க்கு இருக்க வேண்டும். இதற்கு டாப் அப் பாலிசியை பயன்படுத்தி குறைந்த பிரீமியத்தில் அதிக
கவரேஜ் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
இதுவே நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் எவ்வளவு தொகைக்கு ஹெல்த் கவர் எடுத்திருக்கிறீர்கள் என்பதைவிட என்ன மாதிரியான பாலிசிகளை எடுத்திருக்கிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்த வயதில் சாதாரண ஹெல்த் பாலிசிகளை எடுப்பதைவிட உங்கள் தாய், தந்தைக்கு என்ன மாதிரியான நோய்கள் வந்திருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து க்ரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசிகளை எடுப்பது சிறந்த திட்டமிடலாக இருக்கும்.
பொதுவாக, 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை பாலிசி கவரேஜ் தொகையை உயர்த்துவது அல்லது தேவையான கூடுதல் பாலிசியை எடுப்பது நல்லது. அதோடு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களை சார்ந்தவர்களுக்கும் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். அதேபோல், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக பாலிசிகளின் கவரேஜை பரிசீலிப்பது நல்லது. இப்படி கவரேஜ்-ஐ அதிகரிக்கும்பட்சத்தில் குடும்ப நபர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு கையிலிருந்து அதிக தொகையை செலவிடாமல் சிறந்த சிகிச்சை பெறமுடியும்.
40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்குதான் அதிக மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும். எனவே, 40 வயதுக்கு மேற்பட் டவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனி பாலிசி கட்டாயமாக எடுத்துக் கொள்வது அவசியம். 40 வயதுக்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ஃப்ளோட்டர் பாலிசியே போதுமானது.
குடும்பத்துக்கு ஒரு ஃபளோட்டர் பாலிசி இருப்பதைவிட, தனி பாலிசி இருந்தால் யாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவர்களின் பாலிசியிலேயே க்ளெய்ம் பெறலாம். இப்போது வரும் பாலிசிகளில் க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டுகளை கணக்கில் எடுத்து அடுத்து செலுத்தும் பிரீமியத்தில் நோ க்ளெய்ம் டிஸ்கவுன்ட், நோ க்ளெய்ம் போனஸ், பிரீமியம் டிஸ்கவுன்ட், அதிக கவரேஜ் தொகையை அதே பிரீமியத்துக்கு வழங்குவது போன்ற பல சலுகைகள் இருக்கின்றன. எனவே, தனி பாலிசி எடுக்க அதிக யோசனை தேவையில்லை.
உதாரணமாக, 30 வயதுள்ள ஒருவர் 3 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஹெல்த் பாலிசி எடுத்திருக்கிறார் என்றால் அவருக்கு பிரீமியம் தோராயமாக 3,000 ரூபாய் இருக்கும். அவர் தனது பாலிசி கவரேஜ் தொகையை அதிகரிக்க விரும்பினால் வேறு பாலிசி எடுக்கத் தேவை இல்லை. டாப் அப் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் 3,000 ரூபாய்க்கு 10 லட்சம் வரை டாப் அப் பாலிசி கிடைக்கும். ஆக 6,000 ரூபாய் பிரீமியத்துக்கு 12 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் கிடைக்கும்.
இப்படி பாலிசிகளை பரிசீலித்து எடுப்பதால், உங்கள் முதலீடு கரையாமல் இருக்கும். உங்கள் ஓய்வுக்காலம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
எனவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வயதுக்கு தகுந்தாற்போலும், உங்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போலும், உங்களுக்கு வரக்கூடிய நோய்களுக்கு ஏற்பவும் பரிசீலித்து எடுத்துவிட்டால், அசாதாரண நிகழ்வுகளின்போது பர்ஸ் பதம் பார்க்கப்படுவதை தவிர்க்கலாம்.
பந்தாடும் சச்சின்!
இந்தியன் சூப்பர் லீக்கின் (ISL) முக்கியமான அணியான கேரளா பிளாஸ்ட்டர் அணியின் பெரும்பான்மை முதலீட்டாளராக மாறி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இந்த அணியின் 20 சதவிகிதப் பங்கினை ஹைதராபாத்தை சேர்ந்த பிவிபி நிறுவனத்திடமிருந்து தற்போது வாங்கி இருக்கிறார் சச்சின்.
இந்த பங்கினை வாங்க அவர் 75 முதல் 80 கோடி ரூபாய் வரை செலவழித்திருக்கலாம் என்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த போட்டியில் இறுதிப் போட்டியில் நுழைந்த இந்த அணியின் 40 சதவிகிதப் பங்கினை சச்சின் ஏற்கெனவே வைத்திருந்தார். தற்போது மேலும், 20 சதவிகிதப் பங்கினை வாங்கி இருப்பதன் மூலம் இந்த அணியில் அவரது மொத்த பங்கு 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சீக்கிரம் செஞ்சுரி அடிங்க!
Post a Comment