கிச்சன் கைடு!
கிச்சன் கைடு! டீ போட்டுவிட்டு மீதியாகும் சக்கையைக் கொண்டு எண்ணெய்ப் பாத்திரங்களைத் துலக்கினால், எண்ணெ...

பால் குக்கரில் பால் காய்ச்சும்போது விசிலை கழற்றிவிட்டு நீர் நிரப்புவோம். அதேபோல் நீர் நிரப்பப்பட்ட பால் குக்கரில் இட்லி மாவை ஊற்றி வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும்.
பெரிய வெற்றிலையில், சிறிது கடுகு எண்ணெய் தடவி, சமையலறை பல்புகளுக்கு அருகில் வைத்தால், பூச்சிகள் எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
நிலக்கடலையை வறுக்கும்போது கருகிவிடும். கடலையைத் தண்ணீரில் ஒருமுறை அமுக்கி எடுத்து காயவைத்து வறுத்துப் பாருங்கள். கடலை கருகாமல் தோல் மட்டும் தனியே வந்துவிடும்.
கஸ்டர்ட் தயாரிக்கும்போது, ஏடு படியாமல் இருக்க, மேலே சிறிது சர்க்கரையைத் தூவி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
உணவைப் பொட்டலம் கட்டும்போது வாழை இலையை, வெந்நீரில் நனைத்து துடைத்துவிட்டுக் கட்டினால் கட்டுவதும் எளிது, உணவும் பிரிந்து வெளியே வராது.
Post a Comment