மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்!

மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள் மா லை நேர ஸ்நாக்ஸ்... நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்று. அந்த நேர...

மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்
மாலை நேர ஸ்நாக்ஸ்... நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்று. அந்த நேரத்தில் மைதா மற்றும் உடம்புக்கு ஒவ்வாத மாவில் செய்த சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்றவைதான் எத்தனையோ பேருக்குப் பிடித்தவை. இவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துகளை அள்ளித்தருகிற,   குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதாக சிறுதானியங்களிலேயே ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்” என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். ரெசிப்பிகளை செய்துகாட்டியிருக்கிறார் செஃப் இரா.கணேசன்.
சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)
தேவையானவை: இட்லி அரிசி  - 1/4 கிலோ, சாமை - 150 கிராம், குதிரைவாலி - 100 கிராம், உளுந்து - 200 கிராம், கடலைப் பருப்பு - 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் (நறுக்கியது) - தலா 1,  கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து  ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும். குழிப்பணியாரம் செய்யும் தட்டில் மாவை ஊற்றி, வார்த்து எடுக்க வேண்டும்.
பலன்கள்: குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி  ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது.உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். முழுக்க ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.
வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை - தலா 50 கிராம், பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை  ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
பலன்கள்: கடலைப்  பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்  பருப்பு, முந்திரி   அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
திரிகடுகம் காபி
தேவையானவை: மிளகு - 30 கிராம், சுக்கு - 50 கிராம், திப்பிலி - 5 கிராம், கருப்பட்டி, காபி தூள் - தேவையான அளவு.
செய்முறை: மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.
பலன்கள்: சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள். சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும். மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக்காலத்தில் காலை - மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.
பச்சைப் பயறு கட்லட்
தேவையானவை: பச்சைப் பயறு - 1/4 கிலோ, கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம், மஞ்சள் தூள் - சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) - சிறிதளவு, வெங்காயம் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான  அளவு, காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு.
செய்முறை: பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.
பலன்கள்: மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

Related

சிறுதானிய உணவுகள் 6930639508619560378

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item