வெப்பம் தணிக்கும் புளியாரைக் கீரை!
வெப்பம் தணிக்கும் புளியாரைக் கீரை வெ ப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரக்கூடியது புளியாரைக் கீரை. இ...

https://pettagum.blogspot.com/2015/08/blog-post_55.html
வெப்பம் தணிக்கும் புளியாரைக் கீரை
வெப்ப மண்டலப்
பிரதேசங்களில் வளரக்கூடியது புளியாரைக் கீரை. இதற்கு, புளிக்கீரை,
புளியாக்கீரை என்ற பெயர்களும் உள்ளன. புளியாரைக் கீரையின்
புளிப்புச்சுவையைக் கட்டுப்படுத்த துவரம் பருப்பு சேர்த்து, கடைசலாகவும்,
கூட்டாகவும், சாம்பாராகவும் சமைத்துச் சாப்பிடலாம்.
உடல்
வெப்பத்தைத் தணித்துப் பசியைத் தூண்டுகிறது. இந்தக் கீரையைத் தொடர்ந்து
சாப்பிட்டுவந்தால் பித்த மயக்கம், வயிற்றுப்போக்கு, ரத்தம் கலந்த
வயிற்றுப்போக்கு, மூலக்கடுப்பு, மூலநோய்ப் பாதிப்புகள் நீங்கும்.
குன்மம்
எனப்படும் வயிற்றுப்புண் இருப்பவர்கள், அன்றாடம் புதிததாகப் பறித்த
புளியாரை இலையை மசியலாகவோ அல்லது துவையலாகவோச் சமைத்துச்
சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
புளியாரைக் கீரையுடன் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், அண்டவாதம், மேகவெட்டை நோய்கள் தீரும்.
புளியாரை
இலையுடன் குடிநீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தினால், காய்ச்சல் காரணமாக
உண்டாகும் வெப்பம் தணியும். இதே நீரை கண்ணில் விட்டுக் கழுவிவர, கண்
நோய்கள் நீங்கிப் பார்வைத் தெளிவடையும்.
புளியாரை
இலைச்சாற்றுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துப் பானமாக அருந்தலாம்.
அதிகத் தாகம், சீதக்கழிச்சல் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
புளியாரை
இலைச்சாற்றை 15 முதல் 30 மி.லி அளவில் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது
மூன்று வேளை உட்கொண்டாலோ அல்லது இலையைப் பசு மோர் சேர்த்து வேகவைத்து
நாள்தோறும் மூன்று வேளை உட்கொண்டாலோ, சீதபேதி குணமாகும்.
புளியாரை
இலைச் சாற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துப் பற்றுப்போட, தோலில்
உண்டாகும் மருக்கள் நீங்கும். இலைச்சாற்றுடன் சிறிதளவு மிளகுத் தூள்
சேர்த்து, வெண்ணெய் கலந்து தடவிவர, தோலில் உண்டாகும் படைகள், பாலுண்ணி,
மரு, முள் ஆகியவை நீங்கும்.
புளியாரை
இலையை வெந்நீர்விட்டு அரைத்து, பருக்கள், கொப்பளங்கள் மீது வைத்துக்கட்ட
குணமாகும். இலையை நசுக்கி அதிக வலி தரும் கட்டி, வீக்கத்தின் மீது
கட்டுப்போட, அந்த இடத்தில் குளிர்ச்சியை உண்டாக்கி வலி, வீக்கத்தைக்
குறைக்கும்.
புளியாரைக்
கீரையைச் சுத்தம் செய்து, நீர் விட்டு நன்றாக அரைத்து, சம அளவு வெங்காயச்
சாறு சேர்த்துக் காய்ச்சி, தலையில் தடவிவர, உடல் வெப்பத்தால் வரும் தீராத
தலைவலி குணமாகும்.
Post a Comment