சிந்தனையால் சிதறும் எண்ணம்! நினைவாற்றல் ஆரோக்கியமாக இருக்க சில வழிகள்!!
சிந்தனையால் சிதறும் எண்ணம்! “க டந்த மாதம் தன் மனைவியை அழைத்து வந்தார் ஒருவர். ‘இவளுக்குப் பே...

சூப்பர் கம்ப்யூட்டரைவிட அதிகத் திறன்கொண்டது மனித மூளை. கம்ப்யூட்டரின் சி.பி.யு போலதான் நம் மூளையும். நாம் பதிவேற்றம் செய்யும் தகவல் கணினியின் சி.பி.யு வில் சேமித்து வைக்கப்படுகிறது. நமக்குத் தேவைப்படும்போது, அந்தத் தகவலை கம்ப்யூட்டர் எடுத்துத்தருகிறது. இதுபோலத்தான், தினமும் மூளைக்குள் ஏராளமான தகவல்கள் செல்கின்றன. அன்றாடம் நாம் பார்க்கும், கேட்கும் அனைத்து விஷயங்களும் மூளைக்குச் செல்கின்றன. அதில், முக்கியமானதை மட்டும் மூளை சேமித்துவைத்துக்கொள்ளும். லட்சக்கணக்கான தகவல்கள் வந்தாலும் அதில் தேவையானதை மட்டுமே மூளை சேமித்து வைத்துக்கொள்ளும்.
மூளையில் தகவல் பதித்தல் (Grammar)
மூளையின் நினைவாற்றலை, செயல்பாட்டு நினைவுத்திறன் (Working memory), தற்காலிக நினைவுத்திறன் (Short term memory), நீண்ட கால நினைவுத்திறன் (Long term memory) என வகைப்படுத்துகிறோம். எந்த ஒரு விஷயமும் முதலில் மூளையின் செயல்பாட்டு நினைவுத்திறன் பகுதிக்குத்தான் செல்லும். ஒரு போன் நம்பரை படித்ததும், அது செயல்பாட்டு நினைவுத்திறன் பகுதிக்குச் செல்லும். சில நிமிடங்கள் வரை மட்டுமே அது நினைவில் இருக்கும். பிறகு, அது நினைவில் இருந்து அகன்றுவிடும்.
கார், பைக், வீட்டு சாவி, ரிமோட் என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருளை எங்கு வைத்தோம் என நினைவில் வைக்க உதவுவது தற்காலிக நினைவுத்திறன். இந்த நினைவுத்திறன் ஒரு சில நாட்கள் வரைகூட நினைவில் இருக்கும். நேற்று காலை என்ன டிபன் என்று கேட்டால், உடனே நினைவுக்கு வரும். அதற்கு, இதுதான் உதவுகிறது. இதுவே, கடந்த வாரம் என்று கேட்டால் நினைவுக்கு வராது.
மூன்றாவது, நீண்ட கால நினைவுத்திறன். நாம் பிறந்த ஊர், படித்த பள்ளியின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் அவரது முகம், சின்ன வயதில் பழக்கமானவர்கள், எனப் பலவற்றை நினைவுக்குக் கொண்டுவர உதவுகிறது. இந்த தகவல்கள் எல்லாம் அன்றாட வாழ்வுக்குத் தேவை இல்லை என்றாலும், மூளையில் எங்கோ ஒரு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து, அந்தத் தகவல் பற்றிய நினைவே இல்லாமல் இருக்கும்போது, காலப்போக்கில் அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும், மூளையில் சென்று பதிவாக வேண்டும். பல சிந்தனைகளுக்கு நடுவில் அந்தத் தகவலைப் பதிவுசெய்தோம் என்றால், தற்காலிக மற்றும் நீண்ட கால நினைவுகளில் பதியாது. அந்த விஷயத்தைத் திரும்பவும் நினைவுகூற நினைக்கையில், அது முடியாமல் போய் பாதிப்பை ஏற்படுத்தும்.
எந்த ஒருவிஷயத்தை நினைத்து கவலைப்படும்போதும், அதைப் பற்றியே சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்கும். இதை அசைபோடுதல் (Rumination) என்போம். அதனால் ‘இப்ப என்ன நடக்கிறது’ என்பதும் மூளையில் ஆழமாகப் பதியாது. யாராவது ஏதாவது கேட்டால் பதில் அளிக்கத் தாமதமாகும்.
நினைவாற்றலை பாதிப்பவை
பயம்: மனநோய் நிலைக்குப் போவதற்கு முன்பு, ஒருசிலர் ஆழ் மன எண்ணங்களுடனே (Pre-ocupied) இருப்பார்கள். அவர்களுக்குத் தன்னை சுற்றி ஏதோ நடப்பது போன்ற உணர்வு மேலோங்கும். எந்த நேரமும் பயந்த நிலையிலேயே இருப்பார்கள். இந்தப் பயத்தினாலும் வார்த்தையில் குளறுபடி, மறதி வரும். நன்றாகப் படித்திருந்தும், சரியாகத் தேர்வு எழுத முடியாமல் போகலாம். மேடையில் பேசத் தயார்நிலையில் சென்றாலும், கூட்டத்தைப் பார்த்தவுடன் பதற்றத்தில் சொல்ல வேண்டியதை மறந்துபோகலாம். இதுவே, தொடர்ந்து அன்றாடம் செய்யும் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தினால், மனப்பதற்ற நோயாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு.
மறதி: சமையலில் திடீர் என்று சுவை மாறுவது, தினமும் செய்யும் செயல்களைக்கூட யோசித்துச் செய்ய வேண்டியது உள்ளது என்றால், இதை எம்.சி.ஐ (Mild cognitive imparement) என்று சொல்வோம். 30 - 40 வயதிலிருந்தே நிறையப் பேருக்கு இந்தப் பிரச்னை வருகிறது. சின்ன சின்ன விஷயங்கள் மறந்து போயிருக்கும். ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டியிருக்கும். சுத்தமாக மறந்தும்போய்விடலாம். செயல் திறன் குறைந்து இருக்கும். யோசித்துச் செய்கிற விஷயங்கள், இத்தனை நாள் செய்ததைவிட, அதிகப்படியாக மூளையைக் கசக்க வேண்டியிருக்கும். இவர்கள் டிமென்ஷியா என்கிற நரம்பு நோய் அளவுக்குப் போயிருக்க மாட்டார்கள். அதே சமயம் பிரச்னையின்றியும் இருக்க மாட்டார்கள். புலன் உணர்வு குறைந்து (Cognitive decline) இருக்கும்.
தூக்கமின்மை: நூலகத்தில் படித்த பிறகு, புத்தகங்களை அடுக்குவதுபோல, நம் மூளையும் இரவில்தான் விஷயங்களை பிரித்துப் பார்த்து, ஞாபகங்களை ஒழுங்குபடுத்தும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் போனால், அறிவாற்றல் (Cognition) மந்தமடையும். மறுநாள், வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஏதோ ஒரு தடை இருந்து கொண்டே இருக்கும். இருமல், தும்மல், காய்ச்சலினால் தூக்கம் கெட்டாலும் இந்தப் பாதிப்பு இருக்கும். இதெல்லாம் தற்காலிகம்தான். ஓரிரு வாரங்கள் தொடர்ந்து இருந்து, ஏதோ சிந்தனை வசப்பட்டவர்கள் மாதிரியே இருந்தால், உடனடியாகக் கவனித்து அவர்களை நார்மல் நிலைக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைத் தேட வேண்டும்.
கூடியதுதான்.
Post a Comment