சுவையான கருப்பட்டி காபி ரெடி!
தேவையானபொருட்கள் கருப்பட்டி- 50கிராம் பால்- தேவையான அளவு செய்முறை: கருப்பட்டியை ஒன்றிரண்டாக உடைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்...

கருப்பட்டி- 50கிராம்
பால்- தேவையான அளவு
செய்முறை:
கருப்பட்டியை ஒன்றிரண்டாக உடைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்து கருப்பட்டி கரைந்ததும் அடுப்பை அணைத்து அப்படியே மூடி வைக்கவும்.
5நிமிடம் கழித்து கருப்பட்டி நீரை வடிகட்டவும்.
பாலில் தண்ணீர் சேர்த்து காய்ச்சி இனிப்புக்கு தேவையான அளவு கருப்பட்டி நீர் கலந்து பருகவும்.
தயாரித்து வைத்த கருப்பட்டி நீரை ஃப்ரிட்ஜில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்கலாம். குழந்தைகள் காஃபி வேண்டும் என்று அடம்பிடிக்கும் போது இதை கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் இது உடலுக்கு நல்லது.
Post a Comment