ஆதிகுடி பட்டணம் பக்கோடா!
ஆதிகுடி பேஷ் பேஷ் பட்டணம் பக்கோடா! ``பட்டணம் பக்கோடா செய்யலாமா..? கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 200 கிராம், வெண்ணெய், நெய், ...

கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 200 கிராம், வெண்ணெய், நெய், வனஸ்பதி (ஏதேனும் ஒன்று) - 50 மில்லி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ, முந்திரி - 50 கிராம், இஞ்சி - பெரிய துண்டு 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா - தேவையான அளவு, எண்ணெய் - கால் லிட்டர்... இதெல்லாத்தையும் எடுத்துக்கோங்க (இது குறைந்தபட்சம் 10 பேர் சாப்பிடுவதற்கான அளவு)
கடலை மாவு அரிசி மாவை ஒரு பேஸினில் எடுத்து, வெண்ணெய், நெய் அல்லது வனஸ்பதி சேர்த்து, உப்பு, சமையல் சோடா போட்டு நல்லா கலந்துக்கோங்க. பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நல்லா பிசையுங்க. இப்போ அந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளா பிடிங்க. அகலமான வாணலில் எண்ணெய் ஊற்றி, பிடித்து வெச்சிருக்குற உருண்டைகளை பொன்னிறமாகும்வரை பொரித்து எடுங்க. சுடச் சுட பட்டணம் பக்கோடாவை சாப்பிட்டுப் பாருங்க!’’
1 comment
Post a Comment