சுவையான சிறுதானிய ரெசிப்பி !

சுவையான சிறுதானிய ரெசிப்பி சிறுதானிய உணவின் சிறப்பினைச் சொல்லும் வகையில் ஆங்காங்கே உணவுத் திருவிழா நடப்பது அதிகரித்துவருகிறது. இந்த நில...

சுவையான சிறுதானிய ரெசிப்பி

சிறுதானிய உணவின் சிறப்பினைச் சொல்லும் வகையில் ஆங்காங்கே உணவுத் திருவிழா நடப்பது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், திருச்சியில் சென்ற மாதம் எட்டு நாட்களுக்குப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் குதிரைவாலி பிரியாணி, ராகி அடை, ராகி பர்கர், சிறுதானிய அடை, ராகி பீட்சா, சிறுதானிய கட்லெட், சாமை சாம்பார் சாதம், வரகு தயிர் சாதம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விதமாக, சிறுதானிய உணவுகளை சுவையாக சமைத்து அசத்தியிருந்தனர் சமையல் வல்லுநர்கள். திருவிழாவில் செய்து காட்டிய சில சிறுதானிய உணவுகளின் ரெசிப்பிகள் இங்கே...

குதிரைவாலி பிரியாணி
தேவையானவை: குதிரைவாலி அரிசி  4 கப், பீன்ஸ், கேரட்  300 கிராம், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி  தலா 100 கிராம், பூண்டு  5 பல், இஞ்சி  ஒரு துண்டு, கொத்த
மல்லித்தழை, புதினா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்  சிறிதளவு, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, நெய், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃப்ளவர், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.  குக்கரில் எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை சேர்த்து, பிறகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி கலவை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து காய்கறிகளைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டி கிளறி ஏழரை கப் தண்ணீர் சேர்த்து கொத்த மல்லி, புதினா சேர்த்து கிளறி குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.
பலன்கள்: குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். இது மலச் சிக்கலைத் தடுத்து, கொழுப்பைக் குறைக்கும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
சாமை சாம்பார் சாதம்
தேவையானவை: சாமை அரிசி  4 கப், பீன்ஸ், காரட்  250 கிராம், கத்திரிக்காய், தக்காளி  தலா 50 கிராம், காய்ந்த மிளகாய்  8, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு  தலா ஒரு கப், சின்ன வெங்காயம்  10, முருங்கைக்காய்  2, உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  தேவையான அளவு, சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய்  சிறிதளவு.
செய்முறை: சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும். ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். ஏழரை கப் தண்ணீர்  சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:  சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால், முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.
சிறுதானிய கார அடை
தேவையானவை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு  கால் கிலோ, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி  கால் கிலோ, முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை  4 டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும்.  தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி,  அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் சுட்டு எடுக்கவும். 
பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
வரகு தயிர் சாதம்
தேவையானவை: வரகு அரிசி, தயிர்  தலா 4 கப், பால்  100 மி.லி, பெருங்காயத்தூள்  ஒரு டீஸ்பூன், துருவிய கேரட்  ஒரு கப், பச்சை மிளகாய்  7, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: வரகு அரிசியைக் கழுவி வேகவைக் கவும். சாதம் சூடாக இருக்கும்போது, தயிர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும். இதில், நறுக்கிய மிளகாய் வதக்கி, துருவிய கேரட் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது. இதில் நியாசின் மற்றும் ஃபோலிக் ஆசிட், கால்சியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. உடல் பருமன் உள்ளவர்கள் சீரான எடையைக் குறைப்பதற்கும், மன அழுத்தத்தைப் போக்கும் நல்ல மருந்தாக இருக்கும்.

Related

சிறுதானிய உணவுகள் 2406252652175004246

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Dec 30, 2024 8:41:11 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item