கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை! விவசாயக்குறிப்புக்கள்!!
கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை! கோ டை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவி...

கோடை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடு. அப்படியென்றால், திறந்தவெளிக் கிணறுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இப்படிப்பட்ட நிலையிலும், தஞ்சாவூர் மாவட்டம், மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் திறந்தவெளிக் கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதோடு... இறைக்க இறைக்க ஊறிக் கொண்டிருக்கிறது. ஜெயராமன் மேற்கொண்ட சின்ன தொழில்நுட்பம்தான், இதற்குக் காரணம்!
இந்தத் தொழில்நுட்பம் பற்றி பேச ஆரம்பித்த ஜெயராமன், “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், அரசு மேல்நிலைப் பள்ளியில கணிப்பொறி ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டே, விவசாயமும் செய்றேன். இது கடைமடைப் பகுதி. ஆத்துத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாது. திறந்தவெளிக் கிணறுகள் அமைச்சி, அதுல இருந்து தண்ணீர் இறைச்சிதான் எங்க பகுதியில விவசாயம் செஞ்சோம். ஒரு கட்டத்துல கிணறுகள்ல தண்ணீர் குறைஞ்சி போகவும்... கிணறுகளை அப்படியே விட்டுட்டு, போர்வெல் அமைக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல 70, 80 அடியில தண்ணீர் கிடைச்சுது. அதுக்கு பிறகு 300, 350 அடி ஆழத்துக்கு தண்ணீர் போயிடுச்சு. எனக்கு, ஏற்கெனவே இருக்குற கிணறை சும்மா போட்டுட்டு, பல லட்ச ரூபாய் செலவு செஞ்சி போர்வெல் அமைச்சி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்குறதுல விருப்பம் இல்லை. அப்படியே அமைச்சாலும் எதிர்காலத்துல சுத்தமான தண்ணீருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தக் கிணத்துக்குள்ளேயே வேறு என்ன மாற்றம் செய்யலாம்னு தீவிரமான தேடுதல்யே இருந்தேன்.
அவரும் இதை வெச்சு மூணு போகம் சாகுபடி செய்றார்” என்ற ஜெயராமன் நிறைவாக, “வயலுக்கு பாய்ச்சுற தண்ணீர்ல பத்து சதவீதத்தை மட்டும்தான் பயிர்கள் எடுத்துக்குது. மீதி தண்ணீர், இடுக்குகள் வழியா கீழ இறங்கி, இந்தத் துளைகள் மூலமா, கிணத்துக்கே வந்துடுது. மழைநீரும் நிலத்துக்குள்ள இறங்கி, கிணத்துக்கு வந்துடுது. மூணு போகமும் சாகுபடி செய்றதுனால, மண்ணுல எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கு. பயனில்லாம கிடக்குற கிணறுகள்ல, இது மாதிரி துளைகள் அமைச்சா... தண்ணீர் பிரச்னைக்கு சுலபமா தீர்வு கிடைச்சுடும்’’ என்றார்.
திறந்தவெளிக் கிணறுகளின் உள்ளே பக்கவாட்டுப் பகுதிகளில் நீளமான துளைகள் அமைப்பது
‘‘இது மிகச்சிறந்த முறையாகும். கிணறுகளின் உள்ளே வெள்ளைநிற படிவுப்பாறைகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து துளைகள் அமைக்க வேண்டும். இதுபோன்ற பகுதிகளில் உள்ள துளைகள் அவ்வளவு எளிதில் சிதையாது. நீர்ப்பிடிப்பு, நீர்க்கசிவு, ர்ப்போக்குவரத்து அனைத்துக்கும் இதுதான் ஏற்றது. நீளமான துளையிடுவதற்கும் எளிதாக இருக்கும்.
எதிர்காலத்தில் நெகிழ்வுத் தன்மையால் இந்தத் துளைகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க, துளையின் ஒட்டுமொத்த நீளத்துக்குமே பிளாஸ்டிக் குழாய் சொருகுவது நல்லது. பிளாஸ்டிக் குழாயில் சுமார் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே துளைகள் இருக்க வேண்டும்’’ என்றார்.
Post a Comment