கையால் எழுதி மேசேஜ் அனுப்பலாம்; அசத்தும் கூகுள்!
கையால் எழுதி மேசேஜ் அனுப்பலாம்; அசத்தும் கூகுள்! நீ ங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான...

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான் அனுப்ப வேண்டும் என்றில்லை. உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம் தெரியுமா? அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய செயலி ( application) மூலம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
எழுத்துக்கள் மட்டும் அல்ல, இமோஜிகள் என சொல்லப்படும் ஐகான்களையும் இதில் வரைந்து காட்டலாம்.
ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால் இணைய இணைய்ப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற மெசேஜிங் சேவைகளிலும் இதை பயன்படுத்தலாம். ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் இது போன்ற அம்சம் இருக்கிறது. அதை ஆய்வு மூலம் விரிவாக்கு இந்த வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.’
இதில் பக்கம் பக்கமாக எழுத முடியாது, ஆனல் நச்சென்று நாலு வரிகள் எழுதி அனுப்பலாம். கூகுள் பிளேஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime
இதை பயன்படுத்துவது தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு: https://support.google.com/faqs/faq/6188721
Post a Comment