வாழைப்பூ வெங்காய அடை--மினி ரெசிபி ! அடை வகைகள்!!
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி ஒரு கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா அரை கப், இஞ்சி சிறு துண்டு (சுத்தம் செய்யவு...
https://pettagum.blogspot.com/2014/06/blog-post_9906.html
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி ஒரு கப்,
துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு தலா அரை கப்,
இஞ்சி சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு நான்கு பல்,
காய்ந்த
மிளகாய் ஆறு,
பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி,
சிறிய வாழைப்பூ ஒன்று
(நரம்புகளை எடுத்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் ஒரு தேக்கரண்டி,
எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும், இரண்டு மணி நேரம் ஊற விடவும். முதலில், அரிசியை மிக்சியில் போட்டு, சிறிதுநேரம் ஓட விட்டு, பின் பருப்புகள், இஞ்சி மற்றும் பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து, சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் வாழைப்பூ சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

Post a Comment