புரதச் சோறு-மினி ரெசிபி!
தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - கால் கப் முந்திரி - 10 பாதாம் - 10 காய்ந்த மிளகாய் - 2 கசகசா - 1 தேக்கரண்டி நெய் - 2 தேக...
https://pettagum.blogspot.com/2014/06/blog-post_6211.html
வேர்க்கடலை - கால் கப்
முந்திரி - 10
பாதாம் - 10
காய்ந்த மிளகாய் - 2
கசகசா - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சாதம் 1 கப்.
செய்முறை: முதலில் வேர்க்கடலையை வறுத்து தோலெடுத்து வைத்துக் கொள்ளவும். கசகசாவையும், தனியாக வறுத்தெடுக்கவும். பின்னர் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு, முந்திரி பாதாம் இரண்டையும் வறுத்துக் கடைசியாக காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுக்கவும். பின்னர் எல்லாவற்றையும் சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இவற்றை சாதத்துடன் கலந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுக்குச் சாப்பிட கொடுத்தனுப்பலாம்
Post a Comment