நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை! இய‌ற்கை வைத்தியம்!!

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை! ந ம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்க...

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!
ம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்கும் முறைகளை நம் முன்னோர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகை இலைகள், அதன் மருத்துவக் குணங்கள், பயன்கள் பற்றி சென்னை சித்த மருத்துவர் செல்வசண்முகம் விளக்கமாகக் கூறினார். மா, வேப்பிலை, வெற்றிலை, துளசி ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன டாக்டர், 'இவற்றை ஆரோக்கியமானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துகொள்வதே நல்லது' என்று ஆலோசனையும் வழங்கினார்.

  மாவிலை
வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதற்குக் காரணமே இதில் உள்ள மருத்துவக் குணங்கள்தான். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
 இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து, சிறிது சிறிதாகக் கொடுத்தால் வாந்தி வருவது குறையும்.
 கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
 இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
 இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
 மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
 பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.  

 வேப்பிலை
பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்து. வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இயற்கைக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
 வேப்பந்துளிருடன் ஓமம், சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய் தீரும்.
 வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து, நீர் விட்டு அரைத்து உடம்பின் மேல் தேய்த்தால் அம்மை, வியர்க்குரு, கரப்பான், சொரி, சிரங்கு மற்றும் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
 வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். * வேப்பிலை, மிளகு இரண்டையும் 8:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு பெரியவர்களுக்கும், சுண்டைக்காய் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
 வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம். மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.

  வெற்றிலை
விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.
 வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
 இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.
 வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.
 வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.
 வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.
 இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.
 காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
 துளசி:
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து மிக்க ஒர் இலை. பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும். காசநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலையும் பாதுகாக்கும். அதே நேரத்தில் மனரீதியான நோய்க்கும் பயன்படக்கூடியது.
 துளசியை இளஞ்சூட்டில் அல்லது நீராவியில் காட்டினாலே சாறு கிடைக்கும். இந்தச் சாறில் 10 துளி எடுத்து, ஒரு அரிசி அளவு மிளகு சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகும்.
 துளசி, மிளகு, வேப்பிலை கஷாயமாக்கிக் கொடுத்தால், சளி, உடல் வலி விரைவில் குணமாகும்.
 200 மில்லி பசும் பாலில், 10 துளசி இலைகளைப் போட்டு வடிகட்டி எடுத்தால், பாலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தூய்மையான பால் கிடைக்கும்.
 வெந்நீரில் இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, தலைவலி சரியாகும்.
 துளசி இலை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறையாமல், உற்பத்தி மட்டும் தற்காலிகமாகத் தடைபடும். அந்த காலத்தில் ஆண்கள் பயன்படுத்தி வந்த இயற்கைக் கருத்தடை முறையாகவும் இது இருந்தது.
 பெண்களுக்கு பிரசவ காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 30 மில்லி துளசி சாறைக் கொடுத்தால், வலி குறைந்து கருப்பையின் இயக்கம் அதிகமாகும்.
 துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துத் தடவும்போது, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் சரியாகும்.

Related

வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம்---மருத்துவ டிப்ஸ்

வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம்* கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும...

பிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் -3 ---இய‌ற்கை வைத்தியம்

பிரண்டை பிரண்டை. 17 1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி. 2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS. 3) தாவரக்குடும்பம் - :VITACEAE. 4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்ட...

பிரண்டையின் மருத்துவ குணங்கள்.2--மருத்துவ டிப்ஸ்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரண்டையின் மருத்துவ குணங்கள்! பிரண்டை என்ற மூலிகையைப் பற்றியும் அதன் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றியும், பிரண்டை உப்பு என்ற அதன் ஆண் - Bi - product பற்றியும் அத...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Nov 26, 2024 11:19:42 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,118

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item