சுரைக்காய் இனிப்பு பொங்கல் ! சமையல் குறிப்புகள்!!
சுரைக்காய் இனிப்பு பொங்கல் தேவையானவை: பச்சரிசி, சுரைக்காய், பாசிப்பருப்பு - தலா கால் கிலோ, வெல் லம் - அரை கிலோ, நெய் - ஒரு கப், முந்தி...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_7518.html
சுரைக்காய் இனிப்பு பொங்கல்
தேவையானவை: பச்சரிசி,
சுரைக்காய், பாசிப்பருப்பு - தலா கால் கிலோ, வெல் லம் - அரை கிலோ, நெய் -
ஒரு கப், முந்திரிப்பருப்பு - 100 கிராம், உலர்ந்த திராட்சை - 25 கிராம்,
ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை:
பச்சரிசியை ரவை போல் உடைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். சுரைக்காயைச்
சிறிய துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம்,
பாசிப்பருப்பு, சுரைக்காய் துண்டுகளைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு
கொதிக்கவிடவும். பின்பு பச்சரிசி ரவையைப் போட்டுக் கிளறவும். ரவை
வெந்ததும், வாணலியில் சிறிதளவு நெய் விட்டு... முந்திரி, திராட்சையை
வறுத்து சேர்த்து... ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து, மீதமுள்ள
நெய்யை ஊற்றி, நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
வித்தியாசமான இந்தப் பொங்கலை சூடாகப் பரிமாறினால், சாப்பிடுபவர்கள் 'பிரமாதம்!’ என பாராட்டுவார்கள்.
Post a Comment