சுவையான... உருளைக்கிழங்கு சுக்கா! சமையல் குறிப்புகள்!!
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களை இந்த உலகில் பார்க்கவே முடியாது. அதிலும் இதுவ...
தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 5 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
வரமிளகாய் - 8
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
செய்முறை:
குக்கரில் உருளைக்கிழங்கைப் போட்டு, நன்கு வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம், மல்லி, பூண்டு ஆகியவற்றை போட்டு, அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
நன்கு கிளறியதும், அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, மசாலா உருளைக்கிழங்கில் ஒட்டும் வரை நன்கு கிளற வேண்டும்.
இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு சுக்கா ரெடி!!! இதனை சப்பாத்தியுடன் சாப்பிட்டால், ருசியாக இருக்கும்.
குறிப்பு: இதில் தக்காளிக்கு பதிலாக கடைந்த கெட்டியான தயிரை ஊற்றி சமைக்க வேண்டும். தயிரை ஊற்றி சமைத்தால், இந்த சுக்காவை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
Post a Comment