தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! ஹெல்த் ஸ்பெஷல்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:- உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.

வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்: முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.
உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.
இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.
நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.
காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.
தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7946233142302568124

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item