அம்மா ரெசிபி! வெந்தயத் துவையல்!!
''வெந்தயம் உயர் ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்னு சொல்லும் என் அம்மா, வெந...

https://pettagum.blogspot.com/2013/11/blog-post_1437.html
''வெந்தயம் உயர் ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை
நோயையும் கட்டுப்படுத்தும்னு சொல்லும் என் அம்மா, வெந்தயத்தை வைத்து
விதவிதமான சமையலைச் செய்வாங்க. கொஞ்சம் கசப்பா இருந்தாலும் வாசனையும்
சுவையும் சுண்டி இழுக்கும். வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் கலந்து
சாப்பிட்டால் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமும் கிடைக்கும்'' என்ற சென்னை
புழுதிவாக்கத்தைச் சேர்ந்த உஷா, அதன் செய்முறையையும் சொல்கிறார்.
தேவையான பொருட்கள்: வெந்தயம் - 150 கிராம், காய்ந்த
மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், புளி - சிறிது, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் வெந்தயத்தை வாசம் வரும் வரை
வறுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த
மிளகாய், புளி மூன்றையும் வறுத்து, ஆறவைத்து, வெந்தயத்தோடு உப்பு சேர்த்து
சிறிது தண்ணீர் விட்டுத் துவையலாக அரைக்கவும்.
சித்த மருத்துவர் கண்ணன்: வாரம் ஒரு முறை இந்தத்
துவையலைச் செய்து சாப்பிடலாம். இதனால், உடல் உஷ்ணம், வயிற்று வலி,
வயிற்றுப் புண், மாதவிடாய்க் கோளாறு சரியாகும். தினமும் உணவில் வெந்தயம்
சேர்ப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
Post a Comment