ஹெல்த் டிப்ஸ்!
விடியற்காலையில் எழுந்திருக்கப் பழகிக்குங்க. அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கும். வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு இயற்கைச் சூ...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_8200.html
விடியற்காலையில் எழுந்திருக்கப் பழகிக்குங்க. அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கும்.
வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்குச் செல்லுங்கள். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீங்க. அதோட விளைவு, வயதான பிறகுதான் தெரியும்.
அதிக அளவு காய்கறி, பழங்களை சாப்பிடுவது உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தைக் கொடுக்கும். எப்போதும் இளமையோடு வைத்திருக்கும்.
மாதம்
ஒருமுறை சாப்பிட்டு வந்த அசைவ உணவு ஞாயிறு தோறும் என ஆரம்பித்து, தற்போது
தினம் தினம் அசைவ உணவை சாப்பிடுகின்றனர். இதனால் ஆயுள்தான் குறையும்.
அசைவம் சாப்பிடுறதைக் குறைச்சுக்குங்க.
எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைக்கும் உணவை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியத்துக்கான வழி!
Post a Comment