இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், சென்னை. '' கேஸ் சிலிண்டரைப் பொறுத்தவரை நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை...
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், சென்னை.
'' கேஸ் சிலிண்டரைப் பொறுத்தவரை நீங்கள் இன்ஷூரன்ஸ்
எடுத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அனைத்து சிலிண்டர்களும், நாங்களே
இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்போம். இதில் க்ளைம் பெற சில நடைமுறைகள்
உள்ளன. அதாவது, கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டவுடனே அருகில் உள்ள உங்கள்
கேஸ் சிலிண்டர் ஏஜென்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.
அதோடு காவல் துறையில் இது சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு
விசாரணை நடத்தவேண்டும். எதனால் விபத்து ஏற்பட்டது என்பது தெரிந்தபிறகு கேஸ்
ஏஜென்சி அலுவலகம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கும். அதன்பிறகு நாங்கள்
நேரில் ஆய்வு செய்வோம். உண்மையிலேயே கேஸ் சிலிண்டர் கசிவினால்தான் விபத்து
ஏற்பட்டதா என்பதை உறுதி செய்தபிறகு நாங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்து
வைத்திருக்கும் நிறுவனத்திற்கு பரிந்துரைப்போம். அதன் பிறகு எங்களுக்கு
இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து க்ளைம் கிடைக்கும். அதை நாங்கள் உங்களுக்கு
தருவோம்.''
Post a Comment