வா சகிகள், தினம்தோறும் படிக்கும் அனுபவப் பாடங்களிலிருந்து, நமக்கு எழுதி அனுப்பும் டிப்ஸ்கள் ஏராளம். அவற்றில் சில... மி ல்க் ஷேக்,...
வாசகிகள்,
தினம்தோறும் படிக்கும் அனுபவப் பாடங்களிலிருந்து, நமக்கு எழுதி அனுப்பும்
டிப்ஸ்கள் ஏராளம். அவற்றில் சில...
மில்க்
ஷேக், ரோஸ் மில்க் போன்றவற்றைத் தயாரிப்பதாக இருந்தால், சில மணி
நேரத்துக்கு முன்னதாகவே காய்ச்சி ஆற வைத்த பாலில் பாதி அளவு எடுத்து,
ஃப்ரீஸரில் வைத்துவிடுங்கள். மீதிப்பாலில் பானம் தயாரித்து, ஃப்ரீஸரில்
உறைந்திருக்கும் பாலையும் சிறிது சேர்த்தால், பானம் நல்ல குளிர்ச்சியாக
இருப்பதுடன்... திக்காகவும் இருக்கும். பானத்தைத் தயாரித்தபின்
குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகள் சேர்த்தால்... பானம் நீர்த்துவிடும்.
===========================================================
பரிசுப்பொருட்களுடன்
சுற்றப்பட்டு வரும் கிஃப்ட் ரேப்பர்களை வெட்டி, கவர்கள் போல் தயாரித்துக்
கொள்ளுங்கள். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குப் பரிசுப் பணம்
கொடுக்கும்போது, ஓர் அட்டையை கத்தரித்து, பரிசளிப்பவர் பெயர் எழுதி ரூபாய்
நோட்டுகளுடன்
கவர் உள்ளே வைத்தால்... கவரும் கெட்டியாகிவிடும்; பார்ப்பவரையும் கவரும்.
===========================================================
துண்டுகளாக்கிய
இரண்டு தக்காளிப் பழங்கள், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, கொஞ்சம்
கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு, பெருங்காயத்தூள்... இத்துடன் தயிர் அல்லது
பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இதை 2 டம்ளர்
நீர் மோருடன் கலந்து அருந்தினால், வயிறு நிறைந்தது போலவும் இருக்கும்.
புத்துணர்ச்சியும் கிட்டும்.
============================================================
சிலர்
காரின் பின்புறம் டெடி பியர் போன்ற பொம்மைப் பொருட்களை பார்வைக்காக
வைத்திருப்பார்கள். அதற்குப் பதில் உங்கள் குழந்தைகள் வரைந்த ஓவியம்,
கைவினைப் பொருட்கள் காரின் பின்புற கண்ணாடியின் அருகில் வைத்தால்,
வித்தியாசமாக இருப்பதோடு உங்கள் குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவார்களே!
============================================================
மாவு
வகைகளை மெஷினில் அரைத்து வந்ததும், அந்தந்த டப்பாவின் மேல் ஒரு ஸ்கெட்ச்
பேனாவைக் கொண்டு அரைத்த தேதியை எழுதி வைக்கவும். பல சமயங்களில் அரைத்து
எத்தனை நாட்கள் ஆனது என்பதே தெரியாமல் பழைய மாவை பயன்படுத்துவோம். இதன்
காரணமாக ஏதாவது பிரச்னை கூட வரலாம். இதுவே அரைத்த தேதி கண்முன்னே
இருந்தால்... அந்த மாவை சட்டெனப் பயன்படுத்தி ஏதாவது பலகாரம் செய்து கொள்ள
உதவியாக இருக்கும்தானே!
===========================================================
வாஷிங்மெஷினில்
துவைக்க வேண்டிய துணிகளை ஒரு பக்கெட் அல்லது கூடையில் சேமித்து
வைத்திருப்போம். அந்தக் கூடையின் அடியில் சில 'நாப்தலின்’ உருண்டைகளை ஒரு
பேப்பரில் கட்டிப் போட்டு வைத்தால் பூச்சிகளால் துணிகளுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
=============================================================
சில
பொருட்களை மெஷினில் அரைப்பதற்கு முன்பு வறுத்தோ அல்லது வெயிலில் காயவைத்தோ
அரைப்போம். அப்படிக் காயவைக்க வாய்ப்போ... நேரமோ இல்லாவிட்டால், ஐந்து
நிமிடங்கள் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் எல்லாப்
பொருட்களையும் போட்டு குக்கரின் சூடு குறைவதற்குள் நன்கு குலுக்கி
எடுத்தால் பொருட்கள் காய்ந்துவிடும். பிறகு, ஆறவைத்து அரைக்கலாம்.
============================================================
நீங்கள்
இதுவரை செல்லாத புதிய இடங்களுக்குச் செல்வதாக இருந்தால், முதலிலேயே அங்கு
சென்று வந்திருக்கும் உறவினர், நண்பர்களிடம் அந்த இடத்தைப் பற்றி நன்கு
கேட்டறிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப பயணம், தட்பவெப்ப நிலை முதற்கொண்டு...
தங்குவது, கார், ஹோட்டல் என எல்லாவற்றிலுமே ஏமாற்றம் இல்லாமல் நிம்மதியாக
வீடு திரும்ப வழிவகுக்கும்.
============================================================
தோசை
மாவில் உப்பு அதிகம் இருப்பதாகத் தோன்றினால்... ஒரு கரண்டி ரவையை வெறும்
வாணலியில் வறுத்து, பாலில் ஊற வைத்து மாவில் சேர்த்து விடுங்கள். உப்பு
சுவை குறைந்து விடும்.
Post a Comment