கொண்டைக்கடலை சாலட்---சமையல் குறிப்புகள்,
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 (சதுர சதுரமாக, மெலிதாக கட் செய்து கொள்ளவும்) மிளகுத்தூள் - அரை ஸ்பூன் சீ...

வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2 (சதுர சதுரமாக, மெலிதாக கட் செய்து கொள்ளவும்) மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கேரட் - 1
சாட் மசாலா - 1 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கேரட்டை நன்கு கழுவி துருவிக் கொள்ளவும்.
• வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு வேக வைக்கவும்.
• நறுக்கிய உருளைகிழங்கை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
• உருளைக்கிழங்குடன் வெந்த கடலை, வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்
Post a Comment