மினி ரெசிபி: ஸ்டப்டு உருளைக் கிழங்கு பூரி!
தேவையானப் பொருட்கள்: உருளைக் கிழங்கு - கால் கிலோ, சீரகம் -ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி, கோதுமை மாவு...
உருளைக் கிழங்கு - கால் கிலோ, சீரகம் -ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி, கோதுமை மாவு - 2 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் மசித்த உருளைக் கிழங்கை போட்டு வதக்கவும். பின், கோதுமை மாவை பூரிகளாகத் தேய்த்து, அதனுள் கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடி, மறுபடியும் தேய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
Post a Comment