கார்ன் ஸ்டஃப்டு பூரி ---வாசகிகள் கைமணம்
கார்ன் ஸ்டஃப்டு பூரி தேவையானவை: மைதா - ஒரு கப், சிரோட்டி ரவை - 2 டீஸ்பூன், இனிப்பு வகை சோளம் - 2, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள்...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_7984.html
கார்ன் ஸ்டஃப்டு பூரி
தேவையானவை: மைதா - ஒரு கப், சிரோட்டி ரவை - 2 டீஸ்பூன், இனிப்பு வகை சோளம் - 2, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா, உப்பு, ரவை ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். சோளத்தை உதிர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுதை வதக்கவும். அரைத்த சோளத்தை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு... உப்பு, மிளகாய்த்தூள் தூவி, சுருள வதக்கி இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு கிண்ணம் போல் செய்து, சோள கலவையை வைத்து மூடி, பூரிகளாகத் திரட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும்.
கார்ன் ஸ்டஃப்டு பூரி: பச்சைப் பட்டாணியிலும் இதேபோல் ஸ்டஃப்டு பூரி செய்யலாம்.
Post a Comment