கலக்குது காக்டெய்ல் பாயசம் ! --சமையல் குறிப்புகள்,
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், கசகசா -...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_30.html
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை: பிஸ்தா, பாதாமை தனித்தனியே ஊற வைத்து தோல் நீக்கவும். இவற்றுடன் தேங்காய் துருவல், கசகசா சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடைசி சுற்றில் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி அரைத்த கலவையை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொதித்து வாசனை வந்ததும்.... நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறினாலும் சூப்பராக இருக்கும்.
காக்டெய்ல் பாயசம்: சிறிதளவு வாழைப்பழத்தையும் அரைத்து சேர்த்துக் கொண்டால்... சுவையும், மணமும் கூடும்.
Post a Comment