டிப்ஸ்...டிப்ஸ்....அழகு குறிப்புகள்!
பாதம் நன்கு பொலிவுடன் இருக்க வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள், எலுமிச்சை, ஷாம்பு, உப்பு சேர்த்து கலக்கி அந்த நீரில் கால்க...

https://pettagum.blogspot.com/2011/12/blog-post_4676.html
பாதம் நன்கு பொலிவுடன் இருக்க வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள், எலுமிச்சை, ஷாம்பு, உப்பு சேர்த்து கலக்கி அந்த நீரில் கால்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு பெடிக்யூர் ஸ்டிக் கொண்டு குதி கால்களை தேய்க்கவும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். நல்ல பலன் கிட்டும்.
சரும பிரச்சனை உள்ளவர்கள் சோப்பிற்கு பதிலாக பச்சைபயிறு மாவை (பயித்தமாவு) தேய்த்து குளிக்கலாம்.
கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் பருப்பு மாவு, கடலை மாவு, சீகக்காய் எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனைக் குளிக்கும்போது தேய்த்துக் குளித்தால் தோலுக்கு நல்ல நிறம் கிட்டும்.
வேப்பிலைகளை குளிக்கும் தண்ணீரில் போட்டுக் குளித்தாலும் உடலுக்கு நல்லது.
Post a Comment