ரோஜாபூ மருத்துவப்பயன்கள் --இய‌ற்கை வைத்தியம்

ரோஜா. மூலிகையின் பெயர் :- ரோஜா. தாவரப்பெயர் :- ROSA DAMESCENA. தாவரக்குடும்பம் :- ROSACEAE. வேறு பெயர்கள் :- சிறுதாமரை, குலாப்பூ, பன்னீர...

ரோஜா.
மூலிகையின் பெயர் :- ரோஜா.
தாவரப்பெயர் :- ROSA DAMESCENA.
தாவரக்குடும்பம் :- ROSACEAE.
வேறு பெயர்கள் :- சிறுதாமரை, குலாப்பூ, பன்னீர்பூ, ரோஜாப்பூ. எனபன.
வகைகள் :- வெள்ளை, இளஞ்சவப்பு, கருஞ்சிவப்பு,மஞ்சள் மற்றும் பச்சை.
பயன் தரும் பாகங்கள் :- பூ, மற்றும் மொட்டு.
வளரியல்பு :- இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. ரோஜா வியாபாரமாக பல்கேரியா, இட்டலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிரிடுகிறார்கள் ரோஜா 5000 வருடங்களுக்கு முன்பே இந்தாயிவில் இருந்துள்ளது. அதன் பின் தான் மற்ற நாடுகளுக்குப் பரவிற்று. ரோஸ் வொயின் பெரிசியா நாட்டில் பிரபலமானது. அதை அரசர்களும், இராணிகளும், பெரும் பிரமுகர்களும் தான் பயன் படுத்துவார்கள். வீடுகளிலும் தோட்டங்களிலும் அளகுக்காக வளர்கின்றனர். காடுகளில் தன்னிச்சையக வளரும். இது சிறு செடி வகையைச் சேர்ந்தது. கூர்நுனிப் பற்களுள்ள கூட்டிலைகள்யுடையது. இதில் முட்கள் காணப்படும். நல்ல ஈரமும் உரமும் இருந்தால் நன்கு வளரும். இலைகளின் விளிம்புகள் அரும்புகள் இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய ரோஜா நறுமணத்துடன் இருக்கும். காட்டு ரோஜா மணமிருக்காது. ரோஜா கட்டிங்மூலமும், பதியம் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் :- ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு
கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.
ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகைப்பிடயளவு இதழை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.
ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரண
மாகக் குணமாகும்.
பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் சேர்க்க க்கூடாது.
ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.
ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.
பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.
ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
ரோஜாப்பூக்ளிலிருந்து நறுமணமான எண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு அத்தர் என்று பெயர்.
சித்தமருத்துவத்தில் இதனை பொதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந்துகளிலும் லேகியங்கள், மணப்பாகு முதலியவற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.
ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

Related

மூலிகைகள் கீரைகள் 6771824774928294949

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item