தஹி சாட் -- சமையல் குறிப்புகள்
தஹி சாட் தேவையானவை: புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், ஆம்சூர் பவுடர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள...
தேவையானவை: புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், ஆம்சூர் பவுடர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்கா யம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
இனிப்பு சட்னிக்கு: பேரீச்சம்பழம் - 50 கிராம், உலர்ந்த திராட்சை - 50 கிராம், புளிக் கரைசல் - 3 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையை அதில் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து... புளிக் கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி!
ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சட்னி விட்டு, அதனுடன் ஆம்சூர் பவுடர், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் புளிக்காத கெட்டித் தயிரைக் கலக்கவும். எல்லாவற்றையும் கலந்த பின், அந்தக் கலவையின் மேல், ஓமப்பொடி தூவி... நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாப்பிடும்போது ஸ்பூனால் கலக்கிச் சாப்பிட்டால்... இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என பலவித சுவையுடன் இருக்கும்.
தஹி சாட்: கைப்பிடியளவு கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்த கார சட்னியைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.
Post a Comment