தோசை மொருகலாக வரனுமா?--சமையல் குறிப்புகள்
தோசை மொருகலாக வரனுமா? எல்லோருக்கும் தோசை என்றாலே மொரு மொருன்னு ஹோட்டல் மாதிரி சாப்பிடதான் பிடிக்கும். சிலருக்கு தேசை மொருகலாக வராது அப்படி...

https://pettagum.blogspot.com/2011/12/blog-post_10.html
தோசை மொருகலாக வரனுமா?
எல்லோருக்கும் தோசை என்றாலே மொரு மொருன்னு ஹோட்டல் மாதிரி சாப்பிடதான் பிடிக்கும்.
சிலருக்கு தேசை மொருகலாக வராது அப்படியே போய் கல்லில் ஒட்டி கொள்ளும். அதோடு கிடந்து சண்டை போடனும்.
தவ்வா ரொம்ப காய்ந்து இருந்தாலும், அந்த தவ்வாவில் ரொட்டி சுட்டு இருந்தாலும் தோசை சரியா வராது.
தவ்வாவை லேசாக சூடு படுத்தி சிறிது எண்ணை விட்டு அரை வெங்காயத்தை கட் செய்து அப்படியே வட்ட வடிவமாக தேய்க்க வேண்டும்.
பிறகு தோசை வார்த்தால் சூப்பரான மொருகலான தோசை சொய்யின்னு ஊற்றியதும் எடுக்கும் பக்குவத்தில் எழும்பி நிற்கும்.
மொருகலான தோசைக்கு ஒரு கரண்டி நடுவில் ஊற்றி அப்படியே சுழற்றி விடனும்.
பிறகு எண்ணையை சுற்றிலும் தெளித்தார் போல ஊற்றனும்.
பஞ்சு தோசைக்கு தடிமனாக ஒரு கரண்டி விட்டு உள்ளங்கை அளவு சுற்றினால் போதும். இதற்கு லேசாக எண்ணை ஊற்றினால் போதும்.
அப்பாடா இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் என்னேரமும் டிபன் ரெடி.
இந்த குளிர் காலத்தில் மாவு புளிக்காது அதற்கு அரைத்ததும் கைகளால் நல்ல பிசைந்து விட்டு புளிக்க விடவும்.
Post a Comment