மக்ரோனி குருமா...சமையல் குறிப்புகள்
மக்ரோனி குருமா தேவையானவை மக்ரோனி - 100 கிராம் தக்காளி - 1/4 கிலோ பெரிய வெங்காயம் - 2 தனியா - 2 டீஸ்பூன் இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு பூண்டு...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_8486.html
மக்ரோனி குருமா
தேவையானவை
மக்ரோனி - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தனியா - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
தேங்காய் துருவல் - 1 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
செய்முறை
* வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேகவைத்து வடிகட்டவும்.
* வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
* வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் இஞ்சி-பூண்டு, 2 பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.
* தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும். ஆற வைத்து நைஸாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடவும். இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம்பழம் பிழியவும். சூடான சாதம் சப்பாத்தி, பூரியுடன் பரிமாற ஏற்றது.
குறிப்பு
* சப்பாத்திக்கு ஏற்ற `சைடு டிஷ்` இது.
* எல்லாவற்றையும் நன்கு வதக்கி தயாரிப்பதால் இந்த குருமா தனி சுவையுடன் இருக்கும்.
* மக்ரோனி மசாலா மாதிரியும் தயாரித்துக் கொள்ளலாம்.
Post a Comment