ஸ்பெஷல் அடை தோசை...சமையல் குறிப்புகள்

ஸ்பெஷல் அடை தோசை - செய்து பாருங்கள். இது என்னடா ஸ்பெஷல் அடைதோசை என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். சேர்மானம், பக்குவம் என்பது வீட்டு...

ஸ்பெஷல் அடை தோசை - செய்து பாருங்கள்.

இது என்னடா ஸ்பெஷல் அடைதோசை என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். சேர்மானம், பக்குவம் என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும். அதனால் ருசியும் மாறும். எங்கவீட்டில் அடை சாப்பிட்டவர்கள் எல்லொருமே "சூப்பர் " என்றே சொல்லுவார்கள். அதனால் தான் இதை ஸ்பெஷல் அடை என்று குறிப்பிட்டுள்ளேன்.
தேவையான பொருட்கள்
இட்டலி அரிசி = 1 கப்
கடலை பருப்பு =1/2 கப்
துவரம் பருப்பு = 1/2 கப்
மிளகாய்வற்றல் = 4 அல்லது 5. ( தேவையான காரத்திற்கு ஏற்ப)
சாம்பார் வெங்காயம் = 6
அல்லது பெரிய வெங்காயம் 1 அல்லது 2.
இஞ்சி = ஒரு துண்டு
கறிவேப்பிலை.
பெருங்காயம்
தேங்காய் = தேவையான அளவு சிறு சிறு பல்லாக வெட்டிக்கொள்ளவும் உப்பு. செய்முறை இட்டலி அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும். இதைப்போலவே கடலை பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து போட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் கிரைண்டர் அல்லது மிக்க்ஸியில் ஊறவைத்த அரிசியை குறைவாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பாதி அறைபட்டவுடன் ஊறவைத்திருக்கும் பருப்பையும் மிளகாய் வற்றலையும் அதோடு சேர்த்து போட்டு அரைக்கவும். அடை மாவு தோசை மாவை விட சிறிது கட்டியாக இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பருப்பு பிறு பிறு என அரை பட்டவுடன் அரைப்பதை நிறுத்தவும். மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். தேங்காயை சிறு சிறு பல்லாக தேவையான அளவுக்கு வெட்டவும். கறிவேப்பிலையை தேவையான அளவு இலைகளை மட்டும் எடுத்து கிள்ளி வைத்துக்கொள்ளவும். இவை எல்லாவற்றையும் மாவில் போட்டு நன்றாக கலக்கவும். அதோடு தேவையான தூள் உப்பை (இந்த அளவு தோசை மாவுக்கு எவ்வளவு உப்பு போடுவோமோ அதே அளவு உப்பை) அடை மாவில் போடவும். அதோடு வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக உப்பு கரையும் வகையில் மாவை நன்றாக கலக்கவும். மாவை விரலால் தொட்டு நாக்கில் வைத்து உப்பு, காரம் சரியா இருக்கிறதா என பாருங்கள். இல்லையென்றால் தேவையான உப்பு அல்லது மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள். அடை கல் அல்லது தோசை கல் நன்றாக சூடானவுடன் அடை மாவை விரும்பும் சைஸ்க்கு ஊற்றி அடை தோசையின் நடுவிலும், சுற்றி நாலைந்து ஓட்டைகளை சட்டகைப்பையின் வால் பகுதியால் போடுங்கள். நல்லெண்ணையை அடை தோசையை சுற்றியும், ஓட்டை போட்ட பகுதியிலும் விடவும். வெந்தவுடன் திருப்பி போடவும். மாவு சிறிது கட்டியாக இருப்பதால் மெல்லிசாக அடை வார்க்க முடியாது. கட்டியாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். செய்து பாருங்கள். இதற்கு எண்ணை ஊற்றிய மிள்காய் பொடி அல்லது சர்க்கரை (சீனி) அல்லது தேங்காய் சட்டனி அல்லது அவியல் சேர்த்து சாப்பிடலாம்.

Related

சமையல் குறிப்புகள் 3877205348407317192

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 6:30:20 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item