சாப் சுயி...சமையல் குறிப்புகள்
சாப் சுயி தேவையான பொருட்கள் நூடுல்ஸ் 200 கிராம் பொடியாக நறுக்கிய கேரட், குடை மிளகாய் 1 கப் அஜினோமோட்டோ அரை தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்...


சாப் சுயி
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் 200 கிராம் பொடியாக நறுக்கிய கேரட், குடை மிளகாய் 1 கப் அஜினோமோட்டோ அரை தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள் கால் தேக்கரண்டி வெண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை :
கொதிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில், நூடுல்சைப் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வடிகட்டவும். இதை, எண்ணெயில் பொரித்து, தனியாக வைக்கவும். வாணலியில் வெண்ணெய் போட்டு, சூடேறியதும் காய்கறி, உப்பு, மிளகுத்தூள், அஜினோ மோட்டோ ஆகியவற்றை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன், ஏற்கனவே பொரித்து வைத்துள்ள நூடுல்சை போட்டு கலக்கி, சூடாக பரிமாறவும். சுவையான மாலை நேர டிபன் ரெடி!
Post a Comment